Saturday, 16 February 2013

பெண்களுக்கு ஸலாம் சொல்வது கூடாது''

பெண்களை இழிவு படுத்தும் வண்ணமும், அவர்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை மறுக்கும் வண்ணமும்  உண்மைக்குப் புறம்பாக நபி (ஸல்) அவர்களின் பெயரால் ஹதீஸ்கள் என்ற பெயரில் பல்வேறு விதங்களில் இட்டுக் கட்டப்பட்டப் பட்டுள்ளது. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் '' பெண்களுக்கு ஸலாம் சொல்வது கூடாது'' என்பதாகும். இன்றைக்கும் கூட பெரும்பாலான ஊர்களில் பெண்களுக்கு ஸலாம் கூறுவது தடுக்கப்பட்ட செயல் என்ற மூடநம்பிக்கை நிறைந்து காணப்படுகிறது. அதே போல் நாம் நடைமுறை வாழ்க்கையில் பெண்கள் தங்களுக்கு மத்தியில் ஸலாம் சொல்கின்ற பழக்கமும் மிகக் குறைவாகத்தான் காணப்படுகிறது. தவ்ஹீத் பிரச்சாரம் வந்த பிறகுதான் இன்றைய நடைமுறையில் ஓரளவிற்கு பெண்கள் ஸலாம் சொல்லக் கூடிய நடைமுறை அதிகரித்துள்ளது. அல்ஹம்து ­ல்லாஹ்.

'' பெண்கள் மீது ஸலாம் சொல்வது கடமையில்லை'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சில நூற்களில் அவர்களின் பெயரில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றுதான் பின்வரக்கூடிய செய்தியாகும்
  ليس للنساء سلام ولا عليهن سلام . ( منكر ) ஜ حديث رقم லி1430லி 
حدثت عن أبي طالب ثنا علي بن عثمان النفيلي ثنا هشام بن إسماعيل العطار ثنا سهل بن هشام عن إبراهيم بن أدهم عن الزبيدي عن عطاء الخراساني يرفع الحديث قال ليس   للنساء سلام  ولا عليهن سلام قال الزبيدي أخذ على النساء ما أخذ على الحيات أن ينجحرن في بيوتهن   (حلية الأولياء ج: 8 ص: 58)
'' பெண்களுக்கு ஸலாம் சொல்லுதல் என்பதும் இல்லை. பெண்கள் மீதும் ஸலாம் சொல்வது கடமையில்லை.''

அறிவிப்பவர் : அதாவுல் ஹ‎ýராஸானி  நூல் : ஹ‎ýல்யதுல் அவ்­யா பாகம் : 8 பக்கம் : 58 
இந்த செய்தி மிகவும் பலவீனமானதாகும். ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகும். ஏனெனில் இதில் பலவிதமான குறைபாடுகள் உள்ளதாகும்.
முதலாவது இந்தச் செய்தி அறிவிப்பாளர் தொடர் முறிவுடையதாகும். அதாவது இதனை நபியவர்களிடமிருந்து கேட்டவர் யாரென்று குறிப்பிடப்படவில்லை. இதனை அறிவிக்கக்கூடிய அதாவுல் ஹ‎ýராஸானி என்பவர் நபித்தோழர் கிடையாது. 

4122 خ م عه   عطاء بن عبد الله  بن مسلم الخراساني صدوق مشهور وثقه ابن معين وأحمد والعجلي وقال يعقوب بن شيبة هو معروف بالفتوى والجهاد وقال أبو حاتم لا بأس به وذكره إذنه في الضعفاء وقال ابن حبان ردئ الحفظ يخطئ فبطل الاحتجاج به      وقال الترمذي في كتاب العلل قال أحمد ما أعرف لمالك رجلاً يروي عنه يستحق أن يترك عطاء الخراساني قلت ما شأنه قال عامة أحاديثه مقلوبة قال الترمذي وعطاء الخراساني رجل ثقة روى عنه مثل مالك ومعمر ولم نسمع أن أحداً من المتقدمين تكلم فيه بشيء     وقال البيهقي عطاء قوي قاله في الوصايا (المغني في الضعفاء  ج: 2 ص: 434)

மேலும் இவர் மீது பல குறைபாடுகள் உள்ளது. '' இவர் மனன சக்தியில் மோசமானவர் தவறிழைக்கக் கூடியவர் , இவரை ஆதாரமாகக் கொள்வது தவறானதாகும்'' என இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் கூறியுள்ளார்கள்.  '' இவர் விடப்படுவதற்கு தகுதியானவர் '' என்று இமாம் அஹ்மது அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள். மேலும் இவருடைய பெரும்பாலான ஹதீஸ்கள் குளறுபடியானவையாகும் என்றும் கூறியுள்ளார்கள் ( அல் முஃனீ ஃபில் லுஅஃபாயி பாகம் : 2 பக்கம் : 434 ) 

عطاء بن أبي مسلم أبو عثمان الخراساني واسم أبيه ميسرة وقيل عبد الله صدوق يهم كثيرا   ويرسل ويدلس  من الخامسة مات سنة خمس وثلاثين لم يصح أن البخاري أخرج له م (تقريب التهذيب ج: 1 ص: 392)

மேலும் இவர் ஹதீஸ்களில் ''தத்லீஸ்'' இருட்டடிப்பு செய்யக் கூடியவர் என்பது ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தக்ரீபுத் தஹ்தீப் (பாகம் : 1 பக்கம் : 392) என்ற நூ­ல் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் இந்தச் செய்தியில் '' ஸஹ்ல் பின் ஹிஷாம் '' என்பவர் இடம் பெறுகிறார் இவர் யாரென்றே அறியப்படாதவர் ஆவார்.
மேலும் இந்தச் செய்தியைப் பதிவு செய்துள்ள இமாம் அபூ நுஐம் அவர்கள் தனக்கு அறிவித்தவர் யாரென்பதைக் கூறவில்லை. இவ்வாறு பலவிதமான குறைபாடுகள் நிறைந்து காணப்படுகிறது.
மேலும் இது நபியவர்களின் நடைமுறைக்கும், பல ஸஹீஹான ஹதீஸ்களுக்கும் மாற்றமானதாகும். ஸலாம் சொல்லுதல் என்பது மார்க்கத்தில் வ­யுறுத்தப்பட்ட ஒரு கட்டளையாகும். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான கட்டளையாகும். இது பெண்களுக்கு மட்டும் பொருந்தாது எனக் கூறக்கூடியவர்கள் அதற்கு தகுந்த ஆதாரங்களைக் காட்ட வேண்டும்.

81 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ وَوَكِيعٌ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ و حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ أَنْبَأَنَا جَرِيرٌ عَنْ الْأَعْمَشِ بِهَذَا الْإِسْنَادِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا بِمِثْلِ حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ وَوَكِيعٍ  رواه مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : '' நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாத வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை (முழுமையான) ஈமான் உள்ளவர்களாக ஆகமுடியாது. ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ர­) நூல் : முஸ்­ம் (93)

நபியவர்கள் ஸலாம் கூறுவதை இறைநம்பிக்கையையும், நேசத்தையும் வளர்க்கக் கூடிய நல்லறமாக சொல்­க்காட்டுகின்றார்கள். இறைநம்பிக்கை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவசியமான ஒன்றாகும். எனவே ஸலாம் கூறுதல் என்பது பெண்களுக்கும் மிக அவசியமான ஒன்றாகும். 

ஆண்கள் பெண்களுக்கு ஸலாம் கூறுதல் 

நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ர­) அவர்கள் பெருமானாரை விட அதிக வயது குறைந்தவர்கள். ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ர­) அவர்களிடம் வரும்போது சலாம் கூறி நுழையும் பழக்கம் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். குறிப்பாக ஆயிஷா (ர­) அவர்களைப் பற்றி கயவர்கள் அவதூறுகளைப் பரப்பியதால் நபி (ஸல்) அவர்கள் அவர்களின் மீது சந்தேகம் கொண்ட நேரத்திலும் சலாம் சொல்வதை கைவிடவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து சலாம் கூறிவிட்டு நீங்கள் எப்படி இருக்கிறாய்? என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­)
நூல் : புகாரி (2661)

நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஆயிஷா (ர­) அவர்களின் அறைக்குச் சென்று வீட்டாலே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்.) என்று கூறினார்கள். ஆயிஷா (ர­) அவர்கள் வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ் (தங்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்.) தங்களின் (புதிய) துணைவியாரை எப்படிக் கண்டீர்கள்? பாரகல்லாஹ் (அல்லாஹ் தங்களுக்கு சுபிட்சம் வழங்கட்டும்) என்று (மண வாழ்த்துச்) சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தங்களின் துணைவியர் அனைவரின் இல்லங்களையும் தேடிச் சென்று ஆயிஷா (ர­) அவர்களுக்கு சொன்னது போன்றே (முகமன்) சொல்ல அவர்களும் ஆயிஷா (ர­)அவர்கள் சொன்னது போன்று (பிரதிமுகமனும் மணவாழ்த்தும்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ர­)
நூல் : புகாரி (4793

நபியவர்கள் பெண்களாகிய தன்னுடைய மனைவிமார்களுக்கு ஸலாம் கூறியுள்ளார்கள். இதி­ருந்து ஆண்கள் பெண்களுக்கு ஸ்லாம் கூறுவது அவசியம் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
நபியவர்கள் காலத்தில் ஸஹாபாக்களுக்கு மத்தியில் பெண்களுக்கு முறையான முறையில் ஸலாம் சொல்லக் கூடிய வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது. இதற்கு பின்வரும் ஹதீஸ் சான்றாகத் திகழ்கிறது.

938 حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ قَالَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ كَانَتْ فِينَا امْرَأَةٌ تَجْعَلُ عَلَى أَرْبِعَاءَ فِي مَزْرَعَةٍ لَهَا سِلْقًا فَكَانَتْ إِذَا كَانَ يَوْمُ جُمُعَةٍ تَنْزِعُ أُصُولَ السِّلْقِ فَتَجْعَلُهُ فِي قِدْرٍ ثُمَّ تَجْعَلُ عَلَيْهِ قَبْضَةً مِنْ شَعِيرٍ تَطْحَنُهَا فَتَكُونُ أُصُولُ السِّلْقِ عَرْقَهُ وَكُنَّا نَنْصَرِفُ مِنْ صَلَاةِ الْجُمُعَةِ فَنُسَلِّمُ عَلَيْهَا فَتُقَرِّبُ ذَلِكَ الطَّعَامَ إِلَيْنَا فَنَلْعَقُهُ وَكُنَّا نَتَمَنَّى يَوْمَ الْجُمُعَةِ لِطَعَامِهَا ذَلِكَ رواه البخاري

ஸஹ்ல் பின் ஸஃது (ர­) அவர்கள் அறிவிக்கிறார்கள் : எங்களில் ஒரு பெண்மணி இருந்தார். அவர் தமது விளைநிலத்தின் வாய்க்கால் ஓரத்தில் ஒரு வகை கீரைச் செடியைப் பயிரிடுவார். வெள்ளிக் கிழமை வந்து விட்டால் வேருடன் அந்தச் செடியைப் பிடுங்கி வந்து அதை ஒரு பாத்திரத்தில் போடுவார். பிறகு அதன்மீது கோதுமையின் ஒரு கைப்பிடி அளவு போட்டு அரைப்பார். அந்தக் கீரைச் செடியின் தண்டுப்பகுதிதான் அந்த உணவுக்கே மாமிசம் போல் அமையும். நாங்கள் ஜ‎ýம்மா தொழுதுவிட்டு திரும்பி வந்து அவருக்கு ஸலாம் கூறுவோம். அவர் எங்களுக்கு உணவு படைப்பார். அதை நாங்கள் விழுங்குவோம். அவரது இந்த உணவுக்காக நாங்கள் ஜ‎ýம்மா நாளை விரும்புவோம்.
நூல் : புகாரி (938) 

மேற்கண்ட செய்தியில் ஸஹாபாக்கள் ஒரு பெண்ணுக்கு ஸலாம் கூறியுள்ளதை நாம் காண்கிறோம். மேலும் பின்வரக்கூடிய செய்தியும் இதனை உறுதிப்டுத்துகிறது.

 1392 حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ حَدَّثَنَا حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الْأَوْدِيِّ قَالَ رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ اذْهَبْ إِلَى أُمِّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَقُلْ يَقْرَأُ عُمَرُ بْنُ الْخَطَّابِ عَلَيْكِ السَّلَامَ ثُمَّ سَلْهَا أَنْ أُدْفَنَ مَعَ صَاحِبَيَّ قَالَتْ كُنْتُ أُرِيدُهُ لِنَفْسِي فَلَأُوثِرَنَّهُ الْيَوْمَ عَلَى نَفْسِي فَلَمَّا أَقْبَلَ قَالَ لَهُ مَا لَدَيْكَ قَالَ أَذِنَتْ لَكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ قَالَ مَا كَانَ شَيْءٌ أَهَمَّ إِلَيَّ مِنْ ذَلِكَ الْمَضْجَعِ فَإِذَا قُبِضْتُ فَاحْمِلُونِي ثُمَّ سَلِّمُوا ثُمَّ قُلْ يَسْتَأْذِنُ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَإِنْ أَذِنَتْ لِي فَادْفِنُونِي وَإِلَّا فَرُدُّونِي إِلَى مَقَابِرِ الْمُسْلِمِينَ إِنِّي لَا أَعْلَمُ أَحَدًا أَحَقَّ بِهَذَا الْأَمْرِ مِنْ هَؤُلَاءِ النَّفَرِ الَّذِينَ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَنْهُمْ رَاضٍ فَمَنْ اسْتَخْلَفُوا بَعْدِي فَهُوَ الْخَلِيفَةُ فَاسْمَعُوا لَهُ وَأَطِيعُوا فَسَمَّى عُثْمَانَ وَعَلِيًّا وَطَلْحَةَ وَالزُّبَيْرَ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ وَسَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ وَوَلَجَ عَلَيْهِ شَابٌّ مِنْ الْأَنْصَارِ فَقَالَ أَبْشِرْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ بِبُشْرَى اللَّهِ كَانَ لَكَ مِنْ الْقَدَمِ فِي الْإِسْلَامِ مَا قَدْ عَلِمْتَ ثُمَّ اسْتُخْلِفْتَ فَعَدَلْتَ ثُمَّ الشَّهَادَةُ بَعْدَ هَذَا كُلِّهِ فَقَالَ لَيْتَنِي يَا ابْنَ أَخِي وَذَلِكَ كَفَافًا لَا عَلَيَّ وَلَا لِي أُوصِي الْخَلِيفَةَ مِنْ بَعْدِي بِالْمُهَاجِرِينَ الْأَوَّلِينَ خَيْرًا أَنْ يَعْرِفَ لَهُمْ حَقَّهُمْ وَأَنْ يَحْفَظَ لَهُمْ حُرْمَتَهُمْ وَأُوصِيهِ بِالْأَنْصَارِ خَيْرًا الَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ أَنْ يُقْبَلَ مِنْ مُحْسِنِهِمْ وَيُعْفَى عَنْ مُسِيئِهِمْ وَأُوصِيهِ بِذِمَّةِ اللَّهِ وَذِمَّةِ رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُوفَى لَهُمْ بِعَهْدِهِمْ وَأَنْ يُقَاتَلَ مِنْ وَرَائِهِمْ وَأَنْ لَا يُكَلَّفُوا فَوْقَ طَاقَتِهِمْ  رواه البخاري
அம்ரு பின் மைமூன் அவர்கள் அறிவிக்கிறார்கள் '' நான் உமர் இப்னுல் கத்தாப் (ர­) அவர்களை (மரணத் தருவாயில்) பார்த்தேன் தம் மகனை நோக்கி அவர் '' அப்துல்லாஹ்வே மூமின்களின் தாயார் ஆயி‏ஷா (ர­) அவர்களிடம் போய் உமர் ஸலாம் கூறியதாகச் சொல்­விட்டு எனது தோழர்களான நபி (ஸல்), அபூ பக்கர் (ர­) ஆகிய இருவருடனும் நானும் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதற்கு அவர்களிடம் அனுமதி கேள் எனக் கூறினார்கள். (நூல் : புகாரி 1392)
உமர் (ர­) அவர்கள் தனது மகனை ஆயிஷா (ர­) அவர்களிடம் சென்று ஸலாம் கூறியபின் அனுமதி கேட்குமாறு கூறுகிறார்கள். இதி­ருந்தும் ஆண்கள் பெண்களுக்கு முறையான அடிப்படையில் ஸலாம் கூறுவது கூடும் என்பதை நாம்  விளங்கிக் கொள்ள முடிகிறது.

பெண்கள் ஆண்களுக்கு ஸலாம் கூறுவது.

357 حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ قَالَ حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ أَنَّ أَبَا مُرَّةَ مَوْلَى أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ تَقُولُ ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفَتْحِ فَوَجَدْتُهُ يَغْتَسِلُ وَفَاطِمَةُ ابْنَتُهُ تَسْتُرُهُ قَالَتْ فَسَلَّمْتُ عَلَيْهِ فَقَالَ مَنْ هَذِهِ فَقُلْتُ أَنَا أُمُّ هَانِئٍ بِنْتُ أَبِي طَالِبٍ فَقَالَ مَرْحَبًا بِأُمِّ هَانِئٍ فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ قَامَ فَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ مُلْتَحِفًا فِي ثَوْبٍ وَاحِدٍ فَلَمَّا انْصَرَفَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ زَعَمَ ابْنُ أُمِّي أَنَّهُ قَاتِلٌ رَجُلًا قَدْ أَجَرْتُهُ فُلَانَ ابْنَ هُبَيْرَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَجَرْنَا مَنْ أَجَرْتِ يَا أُمَّ هَانِئٍ قَالَتْ أُمُّ هَانِئٍ وَذَاكَ ضُحًى  رواه البخاري
உம்மு ஹானி (ர­) அவர்கள் அறிவிக்கிறார்கள். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு நான் நபி அவர்களிடம் சென்றிருந்தேன்.அப்போது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள்.அவர்களுடைய மகள் ஃபாத்திமா (ர­) நபி (ஸல்) அவர்களுக்குத் திரையிட்டார்கள்.நான் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அப்போது அவர்கள் யாரது ?  என்றார்கள். நான் ''அபூ தா­பின் மகள் உம்மு ஹானி என்றேன். (நூல் : புகாரி 357)
உம்மு ஹானி (ர­) அவர்கள் நபியவர்களுக்கு ஸ்லாம் கூறியிருப்பதி­ருந்து பெண்கள் ஆண்களுக்கு ஸலாம் சொல்வதும் மார்க்கத்தில் உள்ளதே என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. 

2621 حَدَّثَنَا سُوَيْدٌ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ أَخْبَرَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَهْرَامَ أَنَّهُ سَمِعَ شَهْرَ بْنَ حَوْشَبٍ يَقُولُ سَمِعْتُ أَسْمَاءَ بِنْتَ يَزِيدَ تُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ فِي الْمَسْجِدِ يَوْمًا وَعُصْبَةٌ مِنْ النِّسَاءِ قُعُودٌ فَأَلْوَى بِيَدِهِ بِالتَّسْلِيمِ وَأَشَارَ عَبْدُ الْحَمِيدِ بِيَدِهِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ لَا بَأْسَ بِحَدِيثِ عَبْدِ الْحَمِيدِ بْنِ بَهْرَامَ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ و قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ شَهْرٌ حَسَنُ الْحَدِيثِ وَقَوَّى أَمْرَهُ و قَالَ إِنَّمَا تَكَلَّمَ فِيهِ ابْنُ عَوْنٍ ثُمَّ رَوَى عَنْ هِلَالِ بْنِ أَبِي زَيْنَبَ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ أَنْبَأَنَا أَبُو دَاوُدَ الْمَصَاحِفِيُّ بَلْخِيٌّ أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ عَنْ ابْنِ عَوْنٍ قَالَ إِنَّ شَهْرًا نَزَكُوهُ قَالَ أَبُو دَاوُدَ قَالَ النَّضْرُ نَزَكُوهُ أَيْ طَعَنُوا فِيهِ وَإِنَّمَا طَعَنُوا فِيهِ لِأَنَّهُ وَلِيَ أَمْرَ السُّلْطَانِ  رواه الترمدي

4528 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ ابْنِ أَبِي حُسَيْنٍ سَمِعَهُ مِنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ يَقُولُ أَخْبَرَتْهُ أَسْمَاءُ ابْنَةُ يَزِيدَ مَرَّ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نِسْوَةٍ فَسَلَّمَ عَلَيْنَا  رواه أبو داود
12064 حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ ثَابِتٍ حَدَّثَنِي أَبِي أَنَّ أَنَسًا حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَقْبَلَهُ نِسَاءٌ وَصِبْيَانٌ وَخَدَمٌ جَائِينَ مِنْ عُرْسٍ مِنْ الْأَنْصَارِ فَسَلَّمَ عَلَيْهِمْ وَقَالَ وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكُمْ  رواه أحمد
26281 حَدَّثَنَا سُفْيَانُ عَنِ ابْنِ أَبِي حُسَيْنٍ سَمِعَ شَهْرًا يَقُولُ سَمِعْتُ أَسْمَاءَ بِنْتَ يَزِيدَ إِحْدَى نِسَاءِ بَنِي عَبْدِ الْأَشْهَلِ تَقُولُ مَرَّ بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِي نِسْوَةٍ فَسَلَّمَ عَلَيْنَا وَقَالَ إِيَّاكُنَّ وَكُفْرَ الْمُنَعَّمِينَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَمَا كُفْرُ الْمُنَعَّمِينَ قَالَ لَعَلَّ إِحْدَاكُنَّ أَنْ تَطُولَ أَيْمَتُهَا بَيْنَ أَبَوَيْهَا وَتَعْنُسَ فَيَرْزُقَهَا اللَّهُ عَزَّ وَجَلَّ زَوْجًا وَيَرْزُقَهَا مِنْهُ مَالًا وَوَلَدًا فَتَغْضَبَ الْغَضْبَةَ فَرَاحَتْ تَقُولُ مَا رَأَيْتُ مِنْهُ يَوْمًا خَيْرًا قَطُّ وَقَالَ مَرَّةً خَيْرًا قَطُّ  رواه أحمد
)


கே.எம். அப்துன் நாசிர்
பேராசிரியர் இஸ்லாமியக் கல்லலூரி, 

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts