Thursday, 14 February 2013

மாதவிடாய் பெண்களுக்கு குழிப்பதை விட



கேள்வி

நான் திருமணம் ஆகிய ஒரு பெண். ஒவ்வொரு மாதத்திலும் பல நாட்கள் பெரும் தொடக்கு உடையவளாகி விடுகிறேன். அதனால் சுப்ஹ் தொழுகைக்காக தொடர்ந்து அதிகாலையில் குளிக்க வேண்டியேற்படுகிறது. இதன் காரணமாக எனது உடல் நிலை பாதிக்கப்படுகிறது. (தண்ணீர் கிடைக்காவிட்டால் தான் தயம்மும் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.) எனக்கு ஏதாவது மாற்று ஏற்பாடுகள் சலுகைகள் இருக்கிறதா? பதில் தரவும்
முஸ்லீம் பெண்மணி
பதில் :

தண்ணீர் கிடைக்காவிட்டால் மட்டுமே தயம்மம் செய்ய அனுமதியுள்ளது என்ற கருத்து தவறானது. நாம் நோயாளியாக இருந்து நோயின் காரணமாக தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டாலும் தயம்மம் செய்து கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது. இந்நிலையில் நாம் தண்ணீரைப் பெற்றிருந்தாலும் அதைப் பயன்படுத்தி உளூ செய்ய வேண்டும் என்ற கட்டாயம் நமக்கு இல்லை. தயம்மம் செய்தாலே போதுமானது என்று குர்ஆன் கூறுகின்றது.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى حَتَّى تَعْلَمُوا مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّى تَغْتَسِلُوا وَإِنْ كُنتُمْ مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنْ الْغَائِطِ أَوْ لَامَسْتُمْ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ إِنَّ اللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا(43)4
நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் (4 : 43)

நோயாளியாக இருந்தால் குளிக்க வேண்டியதில்லை. தயம்மம் செய்து கொண்டால் போதும் என்று இவ்வசனம் கூறுகின்றது. குளித்தால் நோய் ஏற்படும் என்ற அச்சம் இருந்தாலும் குளிக்காமல் தயம்மம் செய்து கொள்ள அனுமதியுள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸும் தெளிவுபடுத்துகின்றது.
283 حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ أَخْبَرَنَا أَبِي قَالَ سَمِعْتُ يَحْيَى بْنَ أَيُّوبَ يُحَدِّثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ الْمِصْرِيِّ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ احْتَلَمْتُ فِي لَيْلَةٍ بَارِدَةٍ فِي غَزْوَةِ ذَاتِ السُّلَاسِلِ فَأَشْفَقْتُ إِنْ اغْتَسَلْتُ أَنْ أَهْلِكَ فَتَيَمَّمْتُ ثُمَّ صَلَّيْتُ بِأَصْحَابِي الصُّبْحَ فَذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا عَمْرُو صَلَّيْتَ بِأَصْحَابِكَ وَأَنْتَ جُنُبٌ فَأَخْبَرْتُهُ بِالَّذِي مَنَعَنِي مِنْ الِاغْتِسَالِ وَقُلْتُ إِنِّي سَمِعْتُ اللَّهَ يَقُولُ وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَقُلْ شَيْئًا قَالَ أَبُو دَاوُد عَبْدُ الرَّحْمَنِ بْنُ جُبَيْرٍ مِصْرِيٌّ مَوْلَى خَارِجَةَ بْنِ حُذَافَةَ وَلَيْسَ هُوَ ابْنُ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ عَنْ ابْنِ لَهِيعَةَ وَعَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِي قَيْسٍ مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ عَمْرَو بْنَ الْعَاصِ كَانَ عَلَى سَرِيَّةٍ وَذَكَرَ الْحَدِيثَ نَحْوَهُ قَالَ فَغَسَلَ مَغَابِنَهُ وَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ ثُمَّ صَلَّى بِهِمْ فَذَكَرَ نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ التَّيَمُّمَ قَالَ أَبُو دَاوُد وَرَوَى هَذِهِ الْقِصَّةَ عَنْ الْأَوْزَاعِيِّ عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ قَالَ فِيهِ فَتَيَمَّمَ رواه أبو داود
தாதுஸ்ஸலாஸில் எனும் இடத்தில் நடந்த போரில் குளிராக இருந்த ஒரு இரவில் எனக்குத் தூக்கத்தில் விந்து வெளியானது. நான் குளித்தால் நாசமாகி விடுவேன் என்று அஞ்சினேன். எனவே தயம்மும் செய்து என் சகாக்களுக்கு சுப்ஹ் தொழுவித்தேன். இதை நபி (ஸல்) அவர்களிடம் (பின்னர்) தெரிவித்தேன். ''அம்ரே! உமக்குக் குளிப்பு கடமையாக இருந்த போது உமது சகாக்களுக்குத் தொழுவித்தீரா?'' என்று நபி (ஸல்) கேட்டனர். குளிப்பதற்குத் தடையாக இருந்த காரணத்தை அவர்களிடம் கூறினேன். ''உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் உள்ளவனாக இருக்கிறான்'' என்று அல்லாஹ் கூறுவதை நான் செவியுற்றுள்ளேன் என்று விளக்கினேன். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். வேறு எதையும் கூறவில்லை.
அறிவிப்பவர் : அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)
நூல்கள் : அபூதாவூத் (283), அஹ்மத் (17144)

அம்ர் (ரலி) அவர்கள் நோயாளியாக இருக்கவில்லை. குளித்தால் உடலுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் குளிப்பை விடுகிறார்கள். இதற்குப் பதிலாக தயம்மம் செய்து கொள்கிறார்கள். இதை நபியவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக ஆமோதிக்கிறார்கள்.
நமது உடலுக்குத் தீங்கு தரும் எந்த காரியத்தையும் செய்யக் கூடாது என இஸ்லாம் கூறுகின்றது. எனவே அதிகாலையில் கடமையான குளிப்பை நிறைவேற்றினால் உங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அந்தக் குளிப்புக்கு பதிலாக நீங்கள் தயம்மம் செய்து கொள்ளலாம். 

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts