கணவன் மனைவியர் சேர்ந்து குளிப்பது அவர்கள் ஒற்றுமையுடன்
வாழ உதவும் என்று தெரிய வந்துள்ளது. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1400
ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்திச் சென்று விட்டனர்
தினமலர் நவம்பர் 15/2009
கோலாலம்பூர்:வியர்வை நாற்றத்தின் காரணமாக மலேசியாவில் இளம் தம்பதிகளுக்கிடையேயான விவாகரத்து அதிகரித்துள்ளது.மலேசியாவில் சமீபகாலமாக விவாகரத்து
அதிகரித்துள்ளது. பத்து திருமணம் நடந்தால்
அவற்றில் மூன்று திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன.
குறிப்பாக, 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கின்றனர்.
முடைநாற்றம் வீசும்
துணிகளை அணியாமல் துவைத்த துணிகளை அணிந்து தங்கள் துணைவருடன் பழகும் படியும், தம்பதியர்
சேர்ந்து குளிக்கும் படியும் முகமது ரம்லி அறிவுறுத்தியுள்ளார்."கேலந்தன் மாகாணத்தில் உள்ள வயதான ஒற்றுமையுடன் வாழும்
தம்பதியர்களிடம் விசாரித்த போது அவர்கள் பேரன் பேத்தி பிறந்த பின்பும் சேர்ந்து குளிப்பதாக
கூறுகின்றனர். அவர்களின் ஒற்றுமையின் ரகசியத்தை அப்போது புரிந்து கொண்டேன்' என்கிறார், முகமது
ரம்லி.
இஸ்லாம் கூறுவது
(நபி ளஸல்ன அவர்களின்
துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் நபி (ஸல்) அவர்களும் (சேர்ந்து) ஒரே
பாத்திரத்திலிருந்து குளிப்போம். அப்போது எங்கள் இருவரின் கைகளும் அந்தப்
பாத்திரத்தினுள் போட்டியிட்டுச் செல்லும்
நூல் புஹாரி 261
ஆயிஷா (ரலி) கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் நானும் ஒரே
பாத்திரத்திலிருந்து குளிப்போம். நாங்கள் இருவரும் சேர்ந்து பாத்திரத்திலிருந்து
தண்ணீர் அள்ளுவோம்.
நூல் புஹாரி 273
299 ஆயிஷா (ரலி) அவர்கள்
கூறியதாவது:
பெருந்துடக்குடனிருந்த நபி (ஸல்) அவர்களும்
நானும் ஒரே பாத்திரத்திலிருந்து (ஒருமித்து நீரள்ளிக்) குளிப்போம்.
நூல் புஹாரி
No comments:
Post a Comment