Monday, 29 April 2013

அழகு நிலையத்திற்குச் செல்லலாமா ?




நவீன காலத்துப் பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று தங்களை அழகுபடுத்திக் கொள்கிறார்களே! இது கூடுமா?

பதில்: ஒரு பெண் மார்க்கத்திற்கு முரண் இல்லாத வகையில் இறைவன் ஏற்படுத்திய அமைப்பில் எதையும் அகற்றாமலும் சிதைக்காமலும் அழகு படுத்திக் கொள்வதில் குற்றமில்லை. ஆனால் இன்றைய அழகு நிலையங்களில் பெண்களுடைய புருவங்களையும் பற்களையும் அழகிற்காக செதுக்குகிறார்கள்.

சில பேர் புருவத்தை மழித்து எடுத்து விட்டு ஸ்டிக்கர் புருவத்தை விதவிதமாக ஒட்டிக் கொள்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத அளவில் முகத்தில் வளரும் முடிகளைக் கூட விட்டு வைக்காமல் அவற்றை மழித்து எடுத்து விடுகிறார்கள். இது போன்று உருவத்தை சிதைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

"பச்சைக் குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல் வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி (5931)

ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டவர்கள் தான் இறைவனுடைய அமைப்பை மாற்றுவார்கள் என்று திருமறைக் குர்ஆன் கூறுகிறது.

"அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால் நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளை யிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். (அல்குர்ஆன் 4:119)

இந்த வசனம், இறைவனுடைய அமைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது. இன்னும் இறைவன் நம்மை அழகான படைப்பாக படைத்ததாகச் சொல்லிக் காட்டுகிறான்.

அப்படியிருக்க நாம் நம் அமைப்பை மாற்றும் போது இறைவனுடைய படைப்பை அசிங்கமானதாக நாம் கருதி விடுகிறோம். நம் கண்ணிற்கு அசிங்கமாகத் தெரிந்தாலும் அல்லாஹ் அதில் ஏதோ ஒரு அழகை மறைத்திருப்பான்.
மனிதனை அழகிய வடிவில் படைத்தோம். (அல்குர்ஆன் 95:4)


அதே நேரத்தில் மனிதத் தோற்றத்திற்கு மாற்றமாக உடல் அமைப்பு அமைந்திருந்தால் அவற்றைச் சரி செய்வது கூடும். உதாரணத்திற்கு, பெண்களுக்கு மீசை முளைத்திருந்தால், பற்கள் முன்பாக நீண்டிருந்தால் இவை போன்றதை அகற்றுவதில், சரி செய்வதில் குற்றம் இல்லை.

இன்னும் இந்த நவீன காலத்துப் பெண்கள் நாகரீகம் என்று எண்ணிக் கொண்டு ஆண்கள் உடுத்துகின்ற ஜீன்ஸ் டிசர்ட் போன்ற ஆடைகளை அழகிற்காக உடுத்துகிறார்கள். இதற்கு மார்க்கத்தில் தடை உள்ளது. ஆண் உடுத்துபவற்றை பெண் அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பெண் அணிவதை அணியக் கூடிய ஆணையும் ஆண் அணிவதை அணியக் கூடிய பெண்ணையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் (3575)

Saturday, 27 April 2013

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?






 அறைகளில் தங்க வைக்காதீர்கள்! எழுதும் முறையை அவர்களுக்குக் கற்றுக் பெண்களை கொடுக்காதீர்கள்! கைத்தறியையும் அந்நூர் அத்தியாயத்தையும் கற்றுக் கொடுங்கள்!என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: ஹாகிம் (3494)இதே கருத்து தப்ரானியின் முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலிலும் பைஹகீ அவர்களுக்குரிய ஷுஅபுல் ஈமான் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்ற பழமொழியை நபி (ஸல்) அவர்கள் தான் சொல்லித் தந்திருப்பார்களோ என்று நாம் எண்ணும் வண்ணம் இந்த செய்தி அமைந்துள்ளது.

பெண்கள் வேலை செய்தவற்கு என்றே படைக்கப்பட்டவர்கள்; அவர்களுக்கு படிப்புத் தேவையில்லை; அவர்கள் சிறு தொழிலை கற்றுக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கட்டும்; மார்க்கம் தொடர்பான செய்திகளை அறிந்து நூர் அத்தியாயத்தைக் கற்றுக் கொள்ளட்டும்; அவர்களை நல்ல அறைகளில் தங்க வைக்க வேண்டாம்!  என்று இச்செய்தி நமக்கு உணர்த்துகிறது!
முதலில், இந்தச் செய்தி அறிவிப்பாளர் வரிசைப் படி சரியானதா? என்பதை நாம்  பார்ப்போம். இச் செய்தியைப் பதிவு செய்த இமாம் ஹாகிம் அவர்கள், “இந்தச் செய்தி ஆதாரப்பூர்மானதுஎன்று இச்செய்தியைப் பதிவு செய்து விட்டு அதன் இறுதியில் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் இவர்களின் இக்கூற்று சரியானது அல்ல என்பதை இந்த நூலுக்கு விளக்கவுரை எழுதிய இமாம் தஹபீ, தனது தல்கீஸ் எனும் நூலில் இது இட்டுக்கட்டப்பட்டதுஎன்றும் இந்த செய்தியின் அபாயகரமான நபர் (இச் செய்தியின் ஐந்தாவது அறிவிப்பாளர்) அப்துல் வஹ்ஹாப் என்பவராவார். இவரைப் பெரும் பொய்யர் என்று அபூஹாத்திம் கூறியுள்ளார்கள் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

மேலும் இவரைப் பற்றி இமாம் புகாரீ அவர்கள், “இவரிடம் (அடிப்படை இல்லாத) புதுமையான செய்திகள் உண்டுஎன்றும் இவர் இட்டுக்கட்டி சொல்பவர்என்று இமாம் அபூதாவூத் அவர்களும், “இவர் விடப்பட வேண்டியவர்என்று இமாம் உகைலீ, தாரகுத்னீ, பைஹகீ ஆகியோரும் குறிப்பிட்டுள்ளனர்.

இமாம் நஸயீ அவர்கள் இவர் நம்பகமானவர் இல்லைஎன்றும் இவருடைய பெரும்பாலான செய்திகள் இட்டுக்கட்டப் பட்டவை என்று ஸாலிஹ் பின் முஹம்மத் அவர்களும் குறிப்பிட்டுள்ளனர். (தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 6, பக்கம்: 395)

எனவே இந்தச் செய்தி அறிவிப்பாளர் வரிசையின் அடிப்படையில் ஆதாரத்திற்கு ஏற்றது அல்ல என்பது நிரூபணமாகிறது.
இதே செய்தி இடம் பெறும் தப்ரானீயின் அல்முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலில் அப்துல் வஹ்ஹாப் என்பவர் அல்லாமல் வேறு அறிவிப்பாளர் வரிசையில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதிலும் பலவீனம் இருக்கிறது.
இந்த நூலில் இடம் பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர், முஹம்மத் பின் இப்ராஹீம்  என்பவர் பெரும் பொய்யர்என்று இமாம் தாரகுத்னீ அவர்களும் இவருடைய செய்திகளை (இட்டுக்கட்டப்பட்டது என்று) தெளிவு படுத்துவதற்காகவே தவிர அறிவிக்கக் கூடாது. ஏனெனில் இவர் (நபிகளார் மீது) இட்டுக்கட்டிச் சொல்பவர்என்று இப்னுஹிப்பான் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். இவருடைய பெரும்பாலான செய்திகள் சரியானவை அல்லஎன்று இப்னு அதீ அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். (மீஸானுல் இஃதிதால், பாகம்: 6, பக்கம்: 33)
எனவே இந்தச் செய்தியும் அறிவிப்பாளர் வரிசையின் அடிப்படையில் பின்பற்றுவதற்குரிய தகுதியை இழக்கிறது. மேலும் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் யாவும் பெண்கள் கற்றுக் கொள்ளலாம் என்ற கருத்தையே தருகிறன.

இஸ்லாமிய மார்க்கம், கல்வியின் சிறப்பைப் பற்றிப் பேசும் போது ஆண்கள், பெண்கள் என்று பிரித்துப் பேசவில்லை. பொதுவாகவே பேசுகிறது. மேலும் அடிமைகள் நிறைந்த அந்தக் காலத்தில், அடிமைப் பெண்களுக்கும் கூட நபி (ஸல்) அவர்கள் கல்வி கற்றுக் கொடுக்க ஆர்வமூட்டியுள்ளார்கள்.

மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடத்தில்) இரண்டு விதக் கூலிகள் உண்டு. ஒருவர் வேதத்தையுடையவர்களில் உள்ளவர். இவர் தமது (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும் முஹம்மதையும் நம்பியவர். மற்றொருவர் தமது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் தமது எஜமானனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடத்தில் உள்ள ஒரு அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்குக் கல்வியைக் கற்பித்து, அதை அழகுறக் கற்றுத் தந்து பின்னர் அவளை அடிமையிலிருந்து விடுவித்து அவளை மணந்து கொண்டவர். இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: புகாரீ (97)இது போன்ற செய்திகள் மூலம், நபிகளார் பெண்களை எழுதப் படிக்க ஆர்மூட்டிருக்கிறார்கள் என்பதையும் அதை ஆட்சேபணை செய்யவில்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம். மேலும் கல்வி இல்லாத காரணத்தால் தான் இன்று பெண்கள் பரவலாக ஏமாற்றப்படுகிறார்கள்.

படிப்பு அவர்களிடம் இருக்குமானால் அதன் மூலம் அவர்கள் எச்சரிக்கையாக இருப்பதற்கு உதவும். மேலும் மார்க்க விஷயங்களை அறிந்து கொள்வதற்கும் இவை பேருதவியாக இருக்கும்.
எனவே பெண்கள் கல்வி கற்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை! மாறாக ஆர்வமூட்டவே செய்கிறது என்பது தெளிவான செய்தியாகும்.


Wednesday, 24 April 2013

தாலிகட்டுவது இஸ்லாத்தில் உண்டா? தாலி இல்லாவிட்டால் ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டதை எப்படித் தெரிந்து கொள்வது? அப்துல் பத்தாஹ், ஷார்ஜா.





பதில்:


 இஸ்லாத்துக்கும், தாலிக்கும் சம்பந்தமில்லை. பாத்திமா நாயகி தாலி 
கட்டினார்கள்என்று ஒரு பொய்யைச் சொல்லிக் கொண்டு நம்மவர்கள் அதை மார்க்கமாக எண்ணிக் கொண்டுள்ளனர். தாலி என்று சொல்லாமல் கருகமணிஎன்று பெயரை மட்டும் மாற்றிக் கொண்டு ஏராளமான மெளட்டீகங்களும் நடைமுறையில் இருந்து வருகின்றன. கருகமணி அறுந்து விட்டால், அறுந்து விட்டது என்று கூட சொல்லக் கூடாதாம். பெருகி விட்டது என்று சொல்ல ேவண்டுமாம். இப்படி பெருகி விட்ட(?) பின் புதிய நூலில் கோர்த்து கட்டுவதற்கு ஒரு பாத்திஹாவும் ஓத வேண்டுமாம்! இவைகளெல்லாம் அல்லாஹ்வோ, அவனது தூதரோ நமக்குச் சொல்லித் தராதவைகளாகும். ஒரு பெண்ணிற்குத் திருமணம் ஆகி விட்டதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்து விட்டது? அப்படியே அவசியமேற்பட்டால் ஊரில் விசாரித்தால் சொல்லப் போகிறார்கள்.

எனக்கொரு சந்தேகம்! ஒரு ஆணுக்குத் திருமணம் ஆகிவிட்டதை எப்படித் தெரிந்து கொள்வதாம்

Monday, 22 April 2013

சீரழியும் பிள்ளைகள் சிந்திப்பார்களா பெற்றோர்கள்?


சமீபத்தில் இங்கிலாந்தில் தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை வரவழைப்பதாக அமைந்துள்ளது. ஆம்! இங்கிலாந்தில் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் சிறார்கள் பெருமளவில் இன்டர்நெட் ஆபாசத்திற்கு அடிமையாகி வருவதாக அந்த புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டுதோறும் தொடக்கப் பள்ளி சிறார்கள் 3000 பேர் இன்டர்நெட்டில் ஆபாசப் படம் பார்த்தும், ஆபாச நிகழ்ச்சிகளைப் பார்த்தும் சிக்கி பள்ளிகளை விட்டு வெளியேற்றப்படும் நிலை. எதிர்பார்த்ததை விட டீன் ஏஜ் வயதிலும், அதற்கு முந்தைய வயதிலும் பெருமளவிலான சிறார்கள் ஆபாசத்திற்கு அடிமையாகியிருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
தினசரி 15 பேர் :
இங்கிலாந்து பள்ளிகளைப் பொறுத்தவரை சராசரியாக ஒவ்வொரு நாளும் 15 சிறார்கள், செக்ஸ் தொடர்பான புகார்களில் சிக்கி பள்ளிகளை விட்டு நீக்கப்படுகிறார்கள்.

15 பேரில் ஒருவர் தொடக்கப்பள்ளி மாணவர் :
இந்த 15 பேரில் குறைந்தது ஒருவர் தொடக்கப்பள்ளி மாணவராக இருக்கிறார்.

ஆண்டுதோறும் 3000 பேர் 
:
செக்ஸ் சேட்டைகள், பாலியல் அத்துமீறல்கள், தொந்தரவு புகார்கள் காரணமாக 3000 சிறார்கள் பள்ளிகளை விட்டு டிஸ்மிஸ் செய்யப்படுகிறார்கள்.

றார்களைப் பொறுத்தவரை அவர்கள் எஸ்.எம்.எஸ்.மூலம்தான் பெருமளவில் பாலியல் சேட்டைகளில் ஈடுபடுகிறார்கள். கூடப் படிக்கும் மாணவிகளுக்கு ஆபாசமான எஸ்.எம்.எஸ். அனுப்புவது, ஆபாச படங்களை எம்.எம்.எஸ். அனுப்புவது ஆகியவைதான் அவர்கள் செய்யும் பெரிய சேட்டைகளாகும்.

சிறார்களில் பெரும்பாலானோர் ஆபாசப் பத்திரிக்கைகளை படிக்கும் பழக்கம் உடையவர்களாகவும் உள்ளனர்.

அந்த ஆபாசப் புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் உள்ள படங்களைக் கத்தரித்து பென்சில் பாக்ஸில் வைப்பது, நோட்டுப் புத்தகத்தில் ஒட்டுவது ஆகிய பழக்கங்களில் ஈடுபடுகின்றனர்.

மேற்கண்டவாறு அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.
இங்கிலாந்தில்தான் இந்த நிலைமை; நம்ம நாட்டில் இந்தப் பிரச்சனை இல்லை என்று யாரும் தப்புக் கணக்கு போட்டுவிடக்கூடாது.
சமீபத்தில் தேனியில் நடந்த சம்பவத்தை சிந்தித்தால் இங்கிலாந்திற்கும், இந்தியாவிற்கும் இந்த விஷயத்தில் பெரிய வேறுபாடு இல்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

இதோ அந்த செய்தி :
வாடகை மொபைலில் ஆபாசப் படம் - மாணவர்களின் விபரீதப் பழக்கம்
தேனி: தேனியில் நாள் வாடகைக்கு மொபைல் போன் வாங்கி, அதில் ஆபாச படம் பார்க்கும் பழக்கம், பள்ளி மாணவர்களிடம் பரவி வருகிறது.
தேனி மாவட்டத்தில் பல பள்ளிகளில், ஆபாசப் படத்துடன் கூடிய வாடகை மொபைல் போனுடன் மாணவர்கள் வலம் வருகின்றனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் இது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனியில் உள்ள ஒரு பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவனிடம் விலை உயர்ந்த மொபைல் போன் இருந்தது. ஏழ்மையில் இருக்கும் மாணவனிடம், எப்படி விலை உயர்ந்த மொபைல் போன் இருக்கும், என ஆசிரியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த ஆசிரியர் மாணவர்களை ரகசியமாகக் கண்காணித்து வந்தார்.

அப்போது, அதே மொபைல் போன் வேறு வகுப்பில் உள்ள மற்றொரு மாணவரிடம் இருந்தது. அதை பறிமுதல் செய்த ஆசிரியர், மாணவரிடம் அன்பாக விசாரித்து, சோதனை செய்தபோது, பல ஆபாச வீடியோ படங்கள் இருந்தன. இந்த மொபைல் போனை ஐ.டி.ஐ., மாணவர் ஒருவர், பள்ளி மாணவர்களிடம் வாடகைக்கு விட்டுள்ளார். ஒரு நாளைக்கு 50 ரூபாய் வீதம் வசூல் செய்யப்படுகிறது. இதை மாணவர்கள் போட்டி போட்டு, நாள் வாடகைக்கு வாங்கி படம் பார்த்து வருவது தெரிந்தது.

இந்தக் கலாச்சாரம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது என்பது கூடுதல் தகவல். மாணவர்களின் இந்த மொபைல் போன் ஆபாசப் படம் பார்க்கும் மோகத்தை பெற்றோர்களும், ஆசிரியர்களும் கண்காணித்து, அவர்களை விளையாட்டு, படிப்பு என நல்வழிப்படுத்த வேண்டும். மொபைல் போனில் ஆபாசப் படம் பதிந்து கொடுக்கும், கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

படிக்கக் கூடிய பள்ளி மாணவர்கள் வாடகைக்கு செல்ஃபோன் வாங்கி அதில் ஆபாசப் படம் பார்க்கக்கூடிய அளவிற்கு நிலைமை உள்ளதென்றால் பெற்றோர்கள் இதை ஒரு கனம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமா? கடந்த 2011 - 2012க்கான கல்வியாண்டின் போது இராமநாதபுரம் பரமக்குடியில் முதன்மைக்கல்வி அதிகாரி பள்ளிக்கூட ஆய்விற்குச் செல்கின்றார். அங்கு நடந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் குறித்து செய்தித்தாள்களில் வெளியான செய்தியை பெற்றோர்கள் கொஞ்சம் கவனியுங்கள் :

பள்ளி மாணவ, மாணவிகளின் அவலம் : பாடப் புத்தகங்களுக்குள் காதல் கடிதம், ஆபாசப் புத்தகங்கள்!

பரமக்குடி: அரசுப் பள்ளிக்கூடங்களில் சோதனை நடத்தச் சென்ற முதன்மை கல்வி அதிகாரி, மாணவ, மாணவியரின் பாடப் புத்தகங்களுக்குள் ஆபாசப் புத்தகங்கள், காதல் கடிதங்கள், பைகளில் செல்போன்கள் ஆகியவை இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். எல்லாம் 10,11, 12வது வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்.

நல்லவர்களாக இருக்க கிடைக்கும் வாய்ப்புகளை விட கெட்டுப் போகத்தான் இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளன. நாம் எப்படி திடமாக இருக்கிறோம் என்பதை வைத்துத்தான் நிலை தடுமாறாமல் வாழ்க்கைப் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். இன்றைய மாணவர்கள், குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர் மீது பல குற்றச்சாட்டுக்கள் குவிகின்றன. இந்த வயதிலேயே காதலிக்கிறார்கள், இந்த வயதிலேயே செல்போனும் கையுமாக விடாமல் பேசுகிறார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கள். இதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சில பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மீது சில புகார்கள் வந்தன.

இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் பரமக்குடி வந்தார். அங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலில் சோதனையில் இறங்கினார். மேல்நிலை வகுப்புகளுக்குச் சென்று மாணவர்களின் பைகளை சோதனையிட்டார். அப்போது செல்போன்கள் பல சிக்கின. அதை விட அதிர்ச்சியாக ஆபாசப் புத்தகங்கள் எக்கச்சக்கமாக சிக்கின. பலர் தங்களது பைகளில் இருந்த இதுபோன்ற குப்பைகளை தூக்கி ஜன்னல் வழியாக வெளியே வீசினர். அதைப் பார்த்த அதிகாரி அவற்றையும் கைப்பற்றினார்.

பின்னர் பைகளில் செல்போன், ஆபாசப் புத்தகம் உள்ளிட்டவற்றை வைத்திருந்தவர்களைக் கூண்டோடு டிஸ்மிஸ் செய்ய தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டார். இதைக் கேட்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அதிகாரியின் காலில் விழுந்து கெஞ்சிக் கதறி அழுதனர். இதையடுத்து அவர்களை மன்னித்த அதிகாரி, மாணவர்களுக்கு புத்திமதி கூறி இனிமேல் ஒழுங்காகப் படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
பார்த்திபனூரிலும் இதே நிலைதான் :

அடுத்து பரமக்குடியை அடுத்துள்ள  பார்த்திபனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்றார்   ராதாகிருஷ்ணன்.  அங்கும்  சோதனை  நடத்தினார். அப்போது அவருக்கு கடும் அதிர்ச்சியைத் தரும் வகையில் மாணவிகள் பலர் காதல் கடிதங்களை பைகளில் வைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இங்கும் மாணவ, மாணவியர்களுக்கு கடும் எச்சரிக்கை கலந்த அறிவுரையைக் கூறினார் ராதாகிருஷ்ணன். இந்த சோதனை குறித்து அவர் கூறுகையில், பெரும்பாலும் 10,11,12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள்தான் அதிக அளவிலான தவறுகளில், குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். தஙக்ளது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், எப்படிப் படிக்கிறார்கள் என்பது குறித்து கவலையும், அக்கறையும் செலுத்த வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். தொடர்ந்து அவர்களைக் கண்காணித்து வர வேண்டும்.அப்போதுதான் இதுபோன்ற தவறுகளைத் தடுக்க முடியும் என்றார்.

மேற்கண்ட செய்திகள் நமக்குக் கூறுவதென்ன?

வீட்டிலுள்ள பெற்றொர்கள் தங்களது பிள்ளைகளை கவனிக்கத் தவறுதுதான் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாக உள்ளது.
இப்படி தங்களது பெற்றோர்களால் கவனிப்பாரற்று விடப்படும் பிள்ளைகள் மூன்று வகைகளில் சீரழியக்கூடிய நிலை ஏற்படுவதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம்.

1.ஆபாச படங்கள், இன்டர் நெட் மூலம் வழிகேடு, மது, மாது, போதை, புகையிலை, பான்பராக் என்று வழிகெடுவது ஒரு பக்கம்

2.வன்முறை, சமூக விரோதச் செயல்கள் என்று செல்வது ஒரு பக்கம்

3.இஸ்லாமிய நெறிமுறைப்படி வளர்க்கப்பட வேண்டிய, வார்த்தெடுக்கப்பட வேண்டிய பிள்ளைகள் இணைவைத்தலின் பக்கம் போய் நிரந்தர நரகத்திற்குரியவர்களாக மாறக்கூடிய அவலம் ஒரு பக்கம்
மேற்கண்ட மூன்று வகையான வழிகேடுகளிலிருந்து நமது பிள்ளைகளை காக்க வேண்டுமென்றால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கவனித்து பொறுப்புணர்வுடன் வளர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் இந்த உலகத்திலும் இழப்பை அடைவதுடன், மறுமையிலும் இழப்படைய நேரிடும் என்பதை அறிவுரையாக சொல்லிக் கொள்கின்றோம்.
தடுக்க வழி என்ன? :

இதுபோன்ற மோசமான செயல்களிலிருந்து நமது பிள்ளைகளை காக்க வேண்டுமென்றால் அவர்களை சீரழிக்கக் கூடிய வகையிலான அனைத்திலிருந்தும் அவர்களை காக்க வேண்டிய பொறுப்பு பெற்றொர்களுக்கு உள்ளது.
சீரியல்கள்; சினிமாக்கள் :

இவைதான் பெரும்பாலானோர் வழிகெடுவதற்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன. அனைத்து சீரியல்களுமே தவறான உறவுகளை சித்தரிகக்கூடியவைகளாகவும், வன்முறையைத் தூண்ட வழிகோள்பவையாகவும் உள்ளன. இவற்றை குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் கேவலங்கள்தான் பின்னாளில் பெரும்பெரும் விளைவுகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன.

சீரழிக்கும் செல்ஃபோன் :

படிக்கக்கூடிய பிள்ளைகளிடத்தில் செல்ஃபோன்களை வாங்கிக் கொடுத்து, “சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டிஎன்று சொல்வதுபோல பிள்ளைகளை வழிகெடுப்பதே இந்த பெற்றோர்கள்தான். செல்ஃபோனிலிருந்து நமது பிள்ளைகளை காப்பாற்றினாலே பெரும்பாலான பிரச்சனைகள் ஒழிந்துவிடும்.

(நமது மேற்கண்ட குற்றச்சாட்டை உண்மைப்படுத்தும் வைகையில் அமைந்த சம்பவங்களை, “இன்டர்நெட்டினால் பெருகும் ஆபாசம்! டிவியினால் பெருகும் வன்முறைகள்!!என்ற தலைப்பிலான கட்டுரையில் 13ஆம் பக்கத்தில் காண்க)
மேற்கண்டவைகளை தவிர்ந்து மார்க்க போதனைகளை சரியான முறையில் அவர்களுக்கு புகட்டினால் நல்ல தலைமுறைகளை உருவாக்கலாம்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்னர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.          
அல்குர் ஆன் 66 : 6  

சிறந்த தம்பதிகள்






பெரும்பான்மையான முஸ்லிம் குடும்பங்களில் கணவன்,மனைவி பிரச்சனை ஏற்பட்டு தலாக் வரைக்கும் செல்வது அதிகமாகிக்  கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் கணவன் அல்லது மனைவியிடத்தில் மார்க்கப்பற்று இல்லாததுதான். உதாரணமாக ஒரு கணவன் மது  குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்தால் இருவருக்கும் பிரச்சனை முற்றி பிரியும் நிலை ஏற்படும் இதற்குக் காரணம் கணவனிடத்தில் மார்க்கப்பற்று இன்மைதான்.அதேபோல் கணவன் என்னதான் சம்பாதித்து கொடுத்தாலும் பேராசை கொண்ட மனைவி அதைக் கொண்டு திருப்தி அடையாமல் இருந்தால் அங்கு சண்டைகள் வரும். இதன் காரணம் அந்த பெண்ணிடத்தில் மார்க்கப் பற்று இல்லாததுதான்.

         இந்தப் பிரச்சனை தவ்ஹீத் குடும்பங்களிலும் வருவதை பார்க்கிறோம். வரதட்சணை வாங்கும் அல்லது அனாச்சாரமான திருமணத்தில் கலந்து கொள்ளாதே என்று கணவன்  சொன்னால் அல்லாஹ்வின் பயம் இல்லாமல் உறவுதான் முக்கியம் என்று சொல்லி பல பெண்கள் அந்த மார்கத்திற்கு முரணான திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். இதற்கும் அடிப்படை காரணம் மார்க்கப்பற்று குறைவாக உள்ளதுதான்.
            அல்லாஹ்வின் பயம் இல்லாத கணவன்,மனைவிகள் பார்த்து திருந்துவதற்க்கேற்ப   தீன்குலத் தம்பதிகளை நபிமார்கள் மற்றும் சஹாபாக்களின் வாழ்க்கையில் காணமுடிகிறது. அந்த தீன்குலத் தம்பதிகள் போட்டி போட்டுக் கொண்டு அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டிருக்கிறார்கள்.நபிமார்களில் இப்ராஹீம் நபியின் குடும்பம் இதற்கு உதாரணமாகும்.அதே போல சஹாபாக்களில் சிறந்த தம்பதியாக வாழ்ந்த பலதம்பதிகளில் ஒருவர் அபூ தல்ஹா (ரலி), உம்மு சுலைம் (ரலி ). இந்த தம்பதிகள் எப்படியெல்லாம் சிறப்பான வாழ்கையை வாழ்ந்தார்கள் என்பதை காண்போம்.

நபி (ஸல்) அவர்களை நேசிப்பதில்:
புகாரி         3578 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தம் மனைவி) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய குரலை பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கிருக்கும்)பசியைப் புரிந்து கொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், ஆம், இருக்கிறது என்று கூறி விட்டு வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்தார்கள். பிறகு, உம்மு சுலைம் (ரலி) அவர்கள், தமது முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் அதைச் சுருட்டி என் கை (அக்குளு)க்குக் கீழே அதை மறைத்து வைத்து அதன் ஒரு பகுதியால் என் கையைக் கட்டி விட்டார்கள்.90 பிறகு என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டு சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பள்ளிவாச-ல் கண்டேன். அவர்களுடன் மக்கள் இருந்தனர். நான் அவர்களுக்கு முன் நின்றேன். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உன்னை அபூதல்ஹா அனுப்பினாரா? என்று கேட்டார்கள். நான், ஆம் என்றேன். உணவுடனா அனுப்பியுள்ளார்? என்று கேட்டார்கள். நான், ஆம் என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம்முடன் இருந்தவர்களிடம், எழுந்திருங்கள் என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில், அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் வந்து (நபி -ஸல்- அவர்கள் தம் தோழர்களுடன் வந்து கொண்டிருக்கும்) விபரத்தைத் தெரிவித்தேன். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என் தாயாரி டம்), உம்மு சுலைமே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்க ளுடன் வந்திருக்கிறார்கள். ஆனால், நம்மிடம் அவர்களுக்கு உணவளிக்க எதுவுமில்லையே என்று சொன்னார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள் என்று கூறினார்கள். உடனே, அபூ தல்ஹா (தாமே நபி -ஸல்- அவர்களை முன்சென்று வர வேற்பதற்காக) நடந்து சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதல்ஹா தம்முட னிருக்க, உம்மு சுலைம் அவர்களை நோக்கிச் சென்று, உம்மு சுலைமே! உன்னிடமிருப் பதைக் கொண்டு வா! என்று சொன்னார்கள். உடனே, அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி உத்திரவிட, அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு, உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவன் நாடியவற்றை (பிஸ்மில்லாஹ் வையும் மற்ற பிரார்த்தனைகளையும்) சொன்னார்கள். பிறகு, பத்து பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள் என்று (அபூதல்ஹாவிடம்) சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளி யேறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டு விட்டு வெளியேறினார்கள். பிறகு, பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். அப்படி உண்ட மக்கள் எழுபது அல்லது எண்பது பேர் இருந்தார்கள்.

      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு துன்பம் என்றவுடன் இந்த தம்பதிகள் இருவரும் அல்லாஹ்வின் தூதரை எப்படி நேசித்தார்கள் என்பது இந்த ஹதீஸில் இருந்து தெரிகிறது.

அல்லாஹ்வுக்காக தர்மம் செய்வதில்:

உம்மு சுலைம் (ரலி):

        புகாரி   2630 அனஸ் பின் மாலிக் (ரலி)

அவர்கள் கூறியதாவது:

முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்த போது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்க வில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விகிதத்தில்) கொடுப்பதாகவும் எங்களுக்கு பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். எனது தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ தல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப் பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி (ஸல்) அவர்கள் தமது அடிமைப் பெண்ணான, உஸாமா பின் ஸைதுடைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப் பாகக்) கொடுத்தார்கள். கைபர்வாசிகள் மீது போர் தொடுத்து முடித்து, மதீனா வுக்குத் திரும்பிய போது முஹாஜிர்கள், அன்சாரிகளின் மனீஹாக்களை (இரவ லாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்புச் செய்த பேரீச்சந் தோட்டங் களை) அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவருடைய பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்து விட்டார்கள். அவற்றுக்கு பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.

அபூ தல்ஹா (ரலி):
முஸ்லிம்  1821 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனா அன்சாரிகளிலேயே அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல்-ரலி) அவர்கள் பெரும் செல்வராக இருந்தார். அவருடைய செல்வங் களில் "பைரஹா' எனும் தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள நல்ல (சுவை) நீரை அருந்துவது வழக்கம். "நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்'' எனும் இந்த (3:92ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்து சென்று, "அல்லாஹ் தனது வேதத்தில் "நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்' எனக் கூறுகின்றான். என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது "பைரஹா' (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனி) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். அதற்கான நன்மையையும் அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் விரும்பிய வழியில் அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்'' என்று சொன்னார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நல்லது. அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! நீங்கள் அது தொடர்பாகக் கூறியதை நான் செவியுற்றேன். அதை உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே (தானமாக) வழங்குவதையே நான் (உசிதமாகக்) கருதுகிறேன்'' என்று சொன்னார்கள். எனவே, அதை அபூ தல்ஹா (ரலி) அவர்கள் தம் நெருங்கிய உறவினர்களுக்கும், தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

போர்க்களத்தில்:
அபூ தல்ஹா (ரலி):
3811 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களை (த் தனியே) விட்டு விட்டு மக்கள் தோற்று (ஓடி) விட்டனர். அபூ தல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.

மேலும், அபூதல்ஹா (ரலி) அவர்கள் வில்-ன் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். (அப்படி வேகமாக இழுத்து அம்பெய்கையில்) இரண்டு அல்லது மூன்று விற்களை அவர்கள் அன்று உடைத்து விடுவார்கள். எவரேனும் ஒரு மனிதர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், அதை அபூதல்ஹாவிடம் போடு என்று சொல் வார்கள். அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலேயிருந்து (தலையை உயர்த்தி) மக்களை எட்டிப் பார்க்க, அபூதல்ஹா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்பு களில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கி விடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால்) என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும் என்று சொன்னார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு (காயமுற்றவர்களுக்குப் பணி விடைகள் செய்து கொண்டு) இருப்பதை நான் கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் துருத்திகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றி விட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து, அவர்களுடைய வாய்களில் மீண்டும் ஊற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடைய கால் கொலுசுகைள நான் கண்டேன். அபூதல்ஹா (ரலி) அவர் களின் கரத்திலிருந்து இரு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது.

உம்மு சுலைம் (ரலி)

முஸ்லிம்  3697 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஹுனைன் போர் தினத்தன்று பிச்சுவாக் கத்தி ஒன்றை எடுத்து, தம்முடன் வைத்திருந்தார். அதைப் பார்த்த (என் தாயாரின் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் சென்று), "அல்லாஹ்வின் தூதரே! உம்மு சுலைம் தம் முடன் பிச்சுவாக் கத்தி ஒன்றை வைத்திருக் கிறார்'' என்று கூறினார்கள்.

அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தப் பிச்சுவாக் கத்தி எதற்கு?'' என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "இணைவைப்பாளர்களில் யாரேனும் என்னை நெருங்கினால் அவரது வயிற்றை நான் பிளந்துவிடுவேன். அதற் காகத்தான் அதை வைத்துள்ளேன்'' என்று கூறினார். அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரிக்கலானார்கள்.

உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நம்மவரைத் தவிர (மக்கா வெற்றி யின்போது) தங்களிடம் சரணடைந்து தங்களால் (பொது மன்னிப்பளிக்கப்பட்டு) விடுவிக்கப்பட் டவர்களைத் தாங்கள் கொன்றுவிடுங்கள்'' என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் போதுமானவனாக ஆகிவிட்டான். அவன் உபகாரமும் செய்துவிட்டான். (இந்த ஹுனைன் போரில் நமக்குச் சரிவு ஏற்பட்டாலும் பெருத்த பாதிப்பு ஏதுமில்லாமல் அல்லாஹ் காப்பாற்றிவிட்டான்)'' என்று கூறினார்கள்.

இப்படி இந்த தம்பதிகள் சொர்க்கம் பெறவேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக்கொண்டு நற்காரியங்களில் ஈடுபட்டதை பார்த்தோம்.மார்க்கப்பற்று குறைவாக உள்ள கணவன்,மனைவிகள் இவர்களை பார்த்து வாழ்க்கையை திருத்திக்கொண்டு சிறந்த தம்பதிகளாக வாழவேண்டும். 

Sunday, 21 April 2013

மாதவிடாய் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லலாமா ?


மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா? பயான் நடக்கும் போது பள்ளியில் ஓரமாக இருந்து கொள்ளலாமா? 


1. "
மாதவிடாய் ஏற்பட்டுள்ள, குளிப்பு கடமையான எவருக்கும் பள்ளிவாசலை நான் அனுமதிக்க மாட்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்கள்: ஆயிஷா (ரலி),
உம்மு ஸலமா (ரலி)
நூல்கள்: அபூதாவூத் (201), இப்னுமாஜா (637)

2.
மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் (நபிகளாரின் மனைவியரான) எங்களில் ஒருவரின் மடியில் தலையை வைத்து நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை ஓதுவார்கள். எங்களில் ஒருவர் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவர்களில் தொழுகை விரிப்பை பள்ளிவாசலில் விரிப்பார்.
அறிவிப்பவர்: மைமூனா (ரலி)
நூல்கள்: நஸயீ (382),
அஹ்மத் (25582)

3.
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு  (வெளியே உள்ள) தொழுகை விரிப்பை எடுத்து வருமாறு என்னிடம் கூறினார்கள். அதற்கு நான் "எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!'' என்றேன். அப்போது அவர்கள், "அதை எடுத்து வா! மாதவிடாய் என்பது உனது கையில்  (ஒட்டிக் கொண்டிருப்பது) இல்லை'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் (503)

4.
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருக்கும் போது, "ஆயிஷா! அந்தத் துணியை எடுத்துத் தா!'' என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், "எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!'' என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "மாதவிடாய் உனது கையிலில்லை'' என்று கூறினார்கள். அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா (ரலி) அவர்கள்  எடுத்துக் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (504)

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லலாமா? என்பது தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்கள் இவை.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு தங்கள் கேள்விக்குரிய பதிலை நாம் காண முடியும்.
இவற்றில் முதலாவது ஹதீஸ் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாது என்று நேரடியாகத் தெரிவிக்கிறது. என்றாலும் இந்த ஹதீஸ் தொடர்பாக ஹதீஸ் கலை வல்லுநர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கூறியுள்ளார்கள். சிலர் ஆதாரப்பூர்வமானது என்றும் சிலர் பலவீனமானது என்றும் கூறியுள்ளனர்.
மாதவிடாய் ஏற்பட்டுள்ள, குளிப்பு கடமையான எவருக்கும் பள்ளிவாசலை நான் அனுமதிக்க மாட்டேன் என்ற இந்தச் செய்தி பல நூல்களில் இரு வேறு அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ளது.

சில நூல்களில் உம்மு ஸலமா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது. சில நூல்களில் ஆயிஷா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது. இதில் ஆயிஷா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படுவதே சரியானதாகும் என்று அபூஹாத்திம் அவர்கள் இலல் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாக வரும் நூல்களில் அஃப்லத் பின கலீஃபா என்பவர் இடம் பெறுகிறார்.

"
அப்லத் பின் கலீஃபா என்பவர் அறிவிக்கும் இந்தச் செய்தியை (ஹதீஸ் கலை அறிஞர்கள்) பலவீனம் என்று கூறியுள்ளார்கள். மேலும் அஃப்லத் என்பவர் மஜ்ஹூல் (யார் என அறியப்படாதவரின்) என்றும் கூறுகிறார்கள்'' என கத்தாபி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். "பிரபலமானவர் என்றாலும் நம்பகமானவர் என்று அறியப்படாதவர், இந்த செய்தி பெய்யானதாகும்'' என்று இப்னு ஹஸ்ம் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்)
மேலும் இச்செய்தில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளர் ஜஸ்ரா பின்த் திஜாஜா என்பவரைப் பற்றி இமாம் புகாரி அவர்கள்  "இவரிடம் புதுமையான செய்திகள் உள்ளன'' என்றும் "இவர் விஷயத்தில் ஆட்சேபணை உள்ளது'' என்று இமாம் பைஹகீ அவர்களும் குறை கூறியுள்ளார்கள். சிலர் இவரை நம்பகமானவர் என்றும் கூறியுள்ளனர்.
நேரடியாகத் தடை செய்யும் செய்தியில் சில விமர்சனங்கள் உள்ளதை மேற்கூறப்பட்ட செய்திகள் மூலம் காணமுடிகிறது. அதே நேரத்தில் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாது என்று மறைமுகமாகத் தெரிவிக்கும் ஆதாரப்பூர்மான ஹதீஸ்களும் நாம் குறிப்பிட்ட 3, 4வது செய்தியில் உள்ளன.

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு  (வெளியே உள்ள) தொழுகை விரிப்பை எடுத்து வருமாறு என்னிடம் கூறினார்கள். அதற்கு நான் "எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!'' என்றேன். அப்போது அவர்கள், "அதை எடுத்து வா! மாதவிடாய் என்பது உனது கையில்  (ஒட்டிக் கொண்டிருப்பது) இல்லை'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் (503)

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருக்கும் போது, "ஆயிஷா! அந்தத் துணியை எடுத்துத் தா!'' என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், "எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!'' என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "மாதவிடாய் உனது கையிலில்லை'' என்று கூறினார்கள். அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா (ரலி) அவர்கள்  எடுத்துக் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (504)

இந்த ஹதீஸில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பள்ளிவாசலுக்குத் தான் நுழையத் தடையாக இருந்ததாக மாதவிடாயைக் குறிப்பிட்ட போது, பள்ளிவாசலுக்கு மாதவிடாய் பெண்கள் வருவது தடை இல்லை என்றிருந்தால் நபி (ஸல்) அவர்கள் தெளிவாக, "மாதவிடாய் பள்ளிவாசலுக்கு வருவதை விட்டும் தடை செய்யாது'' என்று கூறியிருப்பார்கள்.ஆனால் அவர்கள் அவ்வாறு கூறவில்லை.

மாறாக "உன் கையில் மாதவிடாய் இல்லை. எனவே கையை நீட்டி பள்ளியில் நீ வைக்கலாம்' என்று கூறியுள்ளார்கள். (நபி (ஸல்) அவர்கள் வீடு பள்ளியை ஒட்டியே இருந்தது) எனவே மாதவிடாய் பெண்கள் பள்ளியில் வரக்கூடாது என்பதை இதிலிருந்து விளங்கலாம். அடுத்து நாம் குறிப்பிட்ட 

4வது ஹதீஸிலும் இதை விளங்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும் மாதவிடாய் பெண்களையும் (தொழும் திடலுக்குப்) புறப்படச் செய்யும்படி ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டு விலகி இருப்பார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி)
நூல்: புகாரீ (974)

பெருநாள் திடலுக்கு மாதவிடாய் பெண்களை வரச் சொன்ன நபிகளார், அவர்கள் தொழுமிடத்தை விட்டும் விலகியிருக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளார்கள். தொழுமிடங்களில் முதன்மையான இடம் பள்ளிவாசல். சாதரணமாக உள்ள தொழும் இடத்திலேயே மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் விலகி இருக்க வேண்டுமானால் பள்ளிவாசலில் கண்டிப்பாக விலகி இருக்க வேண்டும் என்று தெளிவாக கூறலாம்.
அவசியமான நேரத்தில் பள்ளிவாசலில் மாதவிடாய் பெண்கள் சென்று வரலாம் என்பதற்குப் பின்வரும் செய்தியை சிலர் ஆதாரம் காட்டுகின்றனர்.
மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் (நபிகளாரின் மனைவியரான) எங்களில் ஒருவரின் மடியில் தலையை வைத்து நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை ஓதுவார்கள். எங்களில் ஒருவர் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவர்களில் தொழுகை விரிப்பை பள்ளிவாசலில் விரிப்பார்.
அறிவிப்பவர்: மைமூனா (ரலி)
நூல்கள்: நஸயீ (382),
அஹ்மத் (25582)

இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து சிலர் பள்ளிவாசலில் அவசியத் தேவை இருக்கும் போது செல்லலாம் என்று கூறுகின்றனர். ஆனால் மற்ற ஹதீஸ்களில் பள்ளிவாசலுக்கு செல்லத் தடை இருப்பதால் இந்த ஹதீஸை அதற்கு முரண்படாதவாறு புரிந்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களின் மனைவியர் தொழுகை விரிப்பை பள்ளியின் வெளியில் இருந்து கொண்டு பள்ளிவாசலுக்குள் விரிப்பார்கள் என்று கருத்துக் கொண்டால் இரண்டு விதமான ஹதீஸ்களும் முரண்படாமல் இருக்கும். இதைப் போன்று தான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் ஹதீஸும் உள்ளது என்பதை கவனிக்க!

எனவே மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாது. பயான் போன்றவைகளில் அவர்கள் பங்கெடுக்க வேண்டுமானால் பள்ளிவாசல் அல்லாத இடங்களிலேயே ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும்.

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts