Friday, 19 April 2013

மனைவிக்காக தாயைத் திட்டலாமா?


எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி அவரது மனைவியிடம் சந்தோக்ஷமாக இருப்பதற்கு அவரது தாயார் எப்போதும் இடையூராக இருக்கிறாராம் அதனால் அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டுமானால் அவரது தாயாரைத் திட்டினால் தான் அவர் பேசாமல் இருக்கிறாராம். இஸ்லாத்தின் பார்வையில் அவ்வாறு செய்வது தடுக்கப்பட்டுள்ளது. எனவே அவர் அவரது தாயாரிடம் எவ்வாறாக நடந்து கொள்வது விளக்கம் தேவை.
ஹக்கீம் சேட்,துபை,யு...
பதில்

கணவன் மனைவி இல்லற வாழ்வில் ஈடுபட்டு ஒருவர் மற்றவருடைய தேவையைப் பூர்த்தி செய்வது அவ்விருவரின் மீதுள்ள கடமையாகும். இதை மார்க்கம் நன்மையான காரியம் எனக் கூறுகின்றது.

1674حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ حَدَّثَنَا وَاصِلٌ مَوْلَى أَبِي عُيَيْنَةَ عَنْ يَحْيَى بْنِ عُقَيْلٍ عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ عَنْ أَبِي الْأَسْوَدِ الدِّيلِيِّ عَنْ أَبِي ذَرٍّ أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالْأُجُورِ يُصَلُّونَ كَمَا نُصَلِّي وَيَصُومُونَ كَمَا نَصُومُ وَيَتَصَدَّقُونَ بِفُضُولِ أَمْوَالِهِمْ قَالَ أَوَ لَيْسَ قَدْ جَعَلَ اللَّهُ لَكُمْ مَا تَصَّدَّقُونَ إِنَّ بِكُلِّ تَسْبِيحَةٍ صَدَقَةً وَكُلِّ تَكْبِيرَةٍ صَدَقَةً وَكُلِّ تَحْمِيدَةٍ صَدَقَةً وَكُلِّ تَهْلِيلَةٍ صَدَقَةً وَأَمْرٌ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ وَنَهْيٌ عَنْ مُنْكَرٍ صَدَقَةٌ وَفِي بُضْعِ أَحَدِكُمْ صَدَقَةٌ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيَأتِي أَحَدُنَا شَهْوَتَهُ وَيَكُونُ لَهُ فِيهَا أَجْرٌ قَالَ أَرَأَيْتُمْ لَوْ وَضَعَهَا فِي حَرَامٍ أَكَانَ عَلَيْهِ فِيهَا وِزْرٌ فَكَذَلِكَ إِذَا وَضَعَهَا فِي الْحَلَالِ كَانَ لَهُ أَجْرًا رواه مسلم

உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு'' என்று நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "(நீங்களே) சொல்லுங்கள்: தடை செய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக் கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா! அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும்போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும்'' என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி)
நூல் : முஸ்லிம் -1832

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்
அல்குர்ஆன் 29:8

மனைவியுடன் சேர்வதற்கு பெற்றோர் தடையாக இருந்தால் அப்போது அது தவறு என்று பெற்றோருக்கு ஆலோசனை கூறலாம். மனைவியைக் கவனிக்கக் கூடாது என்று பெற்றோர் கட்டளையிட்டால் அதை மீறலாம்.

ஆனால் தாயாரைத் திட்டினால் தான் மனைவி திருப்தி அடைவாள் என்பதற்காக தாயைத் திட்டுவது பெரும் பாவமாகும்.

யாரைக் கண்டிப்பதாக இருந்தாலும் அவர்களிடம் தவறு இருந்தால் மட்டுமே கண்டிக்க வேண்டும். அவர்களிடம் தவறு இல்லாத போது கண்டிப்பது பெரும்பாவமாகும்.
இந்த உரையையும் கேட்கவும்

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts