
சந்தோசத்தைக் கெடுக்கும் சந்தேகம்
ஒவ்வொரு
மனிதனின் உள்ளத்திலும் தவறான எண்ணங்களும் சரியான எண்ணங்களும் ஏற்படுவது இயல்பான
ஒன்றாகும். இதில் எது சரி? எது தவறு? என்பதைச்
சிந்திக்க வேண்டும். அப்படி சிந்திக்காமல் செயல்படுபவர்கள் ஏராளம். இவ்வாறு
செயல்படுபவர்களைப் பார்த்ததால்தான் கண் போன போக்கில் கால் போகலாமா? கால் போன போக்கில் மனம்
போகலாமா? மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? என்று பாட்டெழுதுகி றார்கள்.
மனம் போன
போக்கில் போனதனால்தான் இன்றைக்கு பல பிரச்சினைகளை மனிதன் தன் நெஞ்சில்
சுமக்கிறான். அதே அவனுக்கு மன நோய்களைத் தந்து கொண்டிருக்கிறது.
சந்தேகம்
எனும் சாத்தான்
தெருவில்
ஜோடியாக செல்லும் ஆணையும் பெண்ணையும் பார்த்தவுடன் பலருக்கும் பலவிதமான எண்ணங்கள்
தோன்றுவதுண்டு அண்ணன் தங்கையாக இருப்பார்களா? அல்லது கணவன் மனைவியாக இருப்பார்களா என்று எண்ணுவதைவிட
கள்ளக்காதல் ஜோடியாக இருப்பார்களா? என்று எண்ணுபவர்கள்தான் அதிகம்.
வேலைக்குச்
செல்லும் கணவனுக்கு வேறொரு பெண்ணோடு தொடர்பு இருக்குமா?
நல்லவரான
நம் கணவனை வேறு பெண்கள் தன் வலையில் சிக்க வைத்து விடுவார்களோ? என்று மனைவி சந்தேகம் கொள்கிறாள்.
கடையில் வேலைக்கு இருப்பவர் கல்லாப் பெட்டியில் கைவைத்திருப்பாரோ என்ற சந்தேகம்
ஏற்படுகிறது. கடையில் தொழிலாளி பொய் கணக்கு எழுதியிருப்பாரோ என்று முதலாளிக்கு சந்தேகம் ஏற்படுவதுண்டு.
பள்ளிவாசல்
நிர்வாகம் செய்யக் கூடியவர்களைப் பார்த்து பைத்துல்மால் பணத்தை கையாடல்
செய்திருப்பார்களா? நம்மைப் பற்றி
ஏதாவது கூட்டாகப் பேசி சதி திட்டம் தீட்டியிருப்பார்களா? என்று பல தவறான எண்ணங்கள் பலரிடம் ஏற்படுகிறது.
கல்லூரிக்குச்
செல்லும் பிள்ளை முறையாக செல்கிறானா? மார்க்கக் கல்வி கற்கச் செல்லும் முஸ்லிம் பெண்மணி அங்குதான் செல்கிறாளா? பக்கத்து வீட்டுப் பெண்மணி எங்கே
போகிறாள்? எதற்காகப்
போகிறாள்? யாரைப்
பார்க்கப் போகிறாள்? இப்படி நாம்
பார்க்கக்கூடிய ஒவ்வொரு காட்சிகளும் பேசப்படும் பேச்சுகளும் நடத்தைகளும் நமக்கு
சந்தேகம் ஏற்படுத்தும். சந்தேகங்கள் அனைத்தும் உண்மையாகுமா? அல்லது இவ்வாறு சந்தேகப் படலாமா? திருக்குர்ஆன் கூறுவதைப் படியுங்கள்
நம்பிக்கை
கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள்
பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்!
உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா?
அதை
வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். அல்குர்ஆன் (49:06)
நாம்
சந்தேகப்படுவதில் சிலது பாவங்களாகவும் இருக்கக்கூடும் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும்
அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில்
சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய
மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர்
தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார்; மானத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார்.
எவர்
சந்தேகத்திற்கிடமானவைகளில் தலையிடுகிறாரோ அவர், (அனும திக்கப்படாதவைகளில் தலையிடுகிறார்.) வேலியோரங்களில்
(கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும்
ஓர் எல்லை இருக்கின்றது அல்லாஹ்வின் நாட்டில் அவனது எல்லை (வேலி) அவனால்
தடைவிதிக்கப்பட்டவையே.
ஆதாரம்
புகாரி (50)
நாம்
சந்தேகப்படுவதில் சில விஷயங்கள் சரியானதாக இருக்கும். சில தீமைகளைத் தரக்கூடியதாக
இருக்கும். அப்படியென்றால் நாம் எண்ணுவது நன்மையைத் தருமா? என்பதை எவ்வாறு தீர்மானிப்பது அதற்கு நபி(ஸல்) அவர்கள்
விளக்கமளிக்கிறார்கள்.
ஆதாரம்
இல்லாமல் யாரையும் நாம் சந்தேகம் கொள்ளக்கூடாது. பொதுவாக அனைவரையும் நல்லவராகவே எண்ண வேண்டும்.
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகிப்பது குறித்து
உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள்.
(பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருüன்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை
கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு
காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
அறிவிப்பவர்
: அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (6066)
மனதில்
தவறாக கூறிவிட்டோமோ என்ற நெருடல் வந்துவிட்டால் அது பாவமான காரியமாகும் என்பதையும்
மனதில் கொள்க.
நான்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மை ("அல்பிர்ரு') மற்றும் தீமை ("அல்இஸ்மு') பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "நன்மை என்பது நற்பண்பாகும். தீமை என்பது எந்தச் செயல்
குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதை மக்கள் தெரிந்துகொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்
: நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி, நூல் : முஸ்லிம் (4992)
நபி (ஸல்)
அவர்கள் கூறிய படி நடந்து கொண்டால் நமது உள்ளமும் மனதும் தூய்மையாகும். நம்முடைய
ஒவ்வொரு வெளிப்படையான செயலுக்கும் அடிப்படையாக அமைவது உள்ளமாகும். அதை மிகவும்
பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். நம் உடலில் உள்ள கை, கால், கண் போன்ற அனைத்தும் சரியாக இயங்குவதற்கும் தவறான வழியில் செல்வதற்கும் உள்ளமே
மூல காரணமாகும்.
நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிக: உடரில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர்
பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு
உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள்: அதுதான் உள்ளம்.
அறிவிப்பவர் : நுஅமான் பின் பஷீர் (ரலி), நூல் : புகாரி:52
No comments:
Post a Comment