Wednesday 3 April 2013

நகப்பாலிஷ் இடலாமா?


சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு,நகப் பாலிஷ் இடலாம்.தொழுகைக்காக உளூச் செய்யும்போது கைகால்முகம் ஆகியவைநனைய வேண்டியது அவசியமாகும்.

அது போல் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும்மேனி நனைய வேண்டும்நகப் பாலிஷ் என்பது நகத்தில் தண்ணீர்படுவதைத் தடுக்கும் திரவமாகவே விற்பனை செய்யப்படுகின்றது.நைல் பாலிஷ் இட்டவர்கள்உளூச் செய்யும் போதெல்லாம் அதைநீக்கி விட வேண்டும்அது போல் கடமையான குளிப்பைநிறைவேற்றும் போதும் நீக்கிட வேண்டும்.

தண்ணீர் ஊடுருவுவதைத் தடுக்காத முறையில் (மருதாணிசாயம் போல்நைல் பாலிஷ் கண்டுபிடிக்கப்படுமானால் எல்லாநேரங்களிலும் அதை இடலாம்.

தொழுகையும்குளிப்பும் கடமையாகாத சிறுவர்சிறுமியருக்குஇடுவதையும் தடுக்க எந்த முகாந்திரமும் இல்லைஎனினும்பெரியவர்களான பிறகும் எல்லா நேரங்களிலும் அவர்கள் இதைவிரும்பாமல் இருக்கும் வகையில் அறிவுரை கூறுவதுஅவசியமாகும்.

நைல் பாலிஷ் என்பது பொதுவாகவே தடுக்கப்பட்ட ஒன்றுஅல்லஇன்றைய சந்தையில் கிடைக்கும் தன்மையைப் பொருத்தேஇந்த நிபந்தனைகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்உங்கள் கைகளால்நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்!  நன்மை செய்யுங்கள்நன்மைசெய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். (2:195)


No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts