Wednesday, 17 April 2013

பெண்கள், பெண்களுக்கு இமாமத் செய்வதற்கு தடையா?





தொழுகை என்பது முஃமின்கள் மீது நேரம் குறிக்கப் பட்ட கடமையாகும்.அந்த கடமையை ஜமாத்தாக நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் நமக்குக் கட்டளையிடுகிறது.
தொழுகையில் ஆண்கள் இமாமத் செய்கிறார்கள்,பெண்களும் ஆண்களின் பின்னால் இருந்து தொழுகிறார்கள்.அப்படி தொழும் தொழுகை விஷயத்தில் பெண்கள் தொடர்பான இரண்டு முக்கிய சர்சைகள் நமது சமுதாயத்தில் இருக்கிறது அதில் ஒன்று பெண்கள்,ஆண்களுக்கு இமாமத் செய்ய முடியுமா? என்பதாகும் மற்றையது பெண்களுக்கு,பெண்கள் இமாமத் செய்ய முடியுமா? என்பதாகும் இந்த இரண்டு கேள்விகளுக்குமான தெளிவான பதிலை நாம் இப்போது பார்ப்போம்.

ஆண்களுக்கு பெண்கள் இமாமத் செய்ய முடியுமா?

ஆண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யலாமா என்று நாம் ஆய்வு செய்யும் நேரத்தில் ஆண்களுக்கு,பெண்கள் இமாமத் செய்ததவற்கான எந்த ஆதாரத்தையும் நாம் காணமுடியவில்லை. ஆரம்பத்தில் சகோதரர; பி.ஜெ மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த அனைத்து அறிஞர்களும் உம்மு வரகா (ரலி)அவா்களின் செய்தியை வைத்தே ஆண்களுக்கு,பெண்கள் இமாமத் செய்ய முடியும் என்று கூறி வந்தோம்.
ஆனால் அந்த ஹதீஸ் பலவீனமானது என்று தெரிந்தவுடன் அதனை நாம் மாற்றிக் கொண்டோம்.
அந்த ஹதீஸ் பலவீனமானது என்பதிலிருந்து பெண்கள், ஆண்களுக்கு இமாமத் செய்ய முடியாது,பெண்கள் ஆண்களின் பின்னால் நின்று தொழ வேண்டும என்ற சட்டம் தான் சரியானது என்பதை நாம் விளங்க முடியும்.

பெண்கள்,பெண்களுக்கு இமாமத் செய்ய முடியுமா?

இஸ்லாமிய அறிஞர்களில் ஒரு பகுதியினரும்,இன்று நமக்கு மத்தியில் மார்க்கப் பிரச்சாரம் செய்யும் சிலரும் பெண்கள்,ஆண்களுக்கு இமாமத் செய்யவும் முடியாது.இதே நேரம் பெண்கள்,பெண்களுக்கும் இமாமத் செய்யக் கூடாது தனித் தனியாகத்தான் தொழ வேண்டும் என்று பத்வா கொடுக்கிறார்கள் அவா்கள் சொல்வது மார்க்க அடிப்படையில் தவறான கருத்தாகும்.
ஏன் என்றால் தொழுகை தொடர்பாக நபியவர்கள் சொன்ன அனைத்தும் ஆண்கள்,பெண்கள் என்ற இரு பாலாருக்கும் உரியதே!
அதில் பெண்கள் எதை செய்யக்கூடாது என்பதை நபியவர்கள் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார;கள் பெண்களுக்கு,பெண்கள் இமாமத் செய்யக் கூடாது என்ற சட்டம் இஸ்லாத்தில் இருந்திருந்தால் நபியவர்கள் கண்டிப்பாக அதனை தெரிவித்திருப்பார்கள்.
பெண்கள் இமாமத் செய்வது தொடர்பான தடையேதும் ஹதீஸ்களில் வந்தில்லையென்பதால் இமாமத் தொடா்பான பொதுவான சட்டம் ஆண் பெண் ஆகிய இரு சாராருக்கும் உரியது என்பதை நாம் அறிய முடிகிறது.

சிலா் இமாமத் தொடர்பாக வரும் பொதுவான ஹதீஸ்களை வைத்து பெண்கள்,பெண்களுக்கு இமாமத் செய்யலாம் என்று முடிவெடுக்கக் கூடாது என்று கூறிவருகிறார்கள்.
அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரே மக்களுக்குத் தொழுவிப்பார். மக்கள் அனைவரும் சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாக இருந்தால் அவர்களில் நபி வழியை நன்கு அறிந்தவர் (தொழுவிப்பார்). அதிலும் அவர்கள் சம அளவு அறிவுடையோராய் இருந்தால் அவர்களில் முதலில் ஹிஜ்ரத் செய்தவர் (தொழுவிப்பார்). அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்திருப்பின் அவர்களின் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தொழுவிப்பார்). ஒருவர் மற்றொரு மனிதருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் (அவருடைய அனுமதியின்றி) தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டாம். ஒரு மனிதருக்குரிய வீட்டில் அவரது விரிப்பின் மீது அனுமதியின்றி அமர வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமஸ்வூத் அல்அன்ஸாரீ (ரலி),நூல்கள் : முஸ்லிம் (1192), திர்மிதீ (218 )

நன்கு ஓதத் தெரிந்தவா் இமாமத் செய்யட்டும் என்ற பொதுவான ஹதீஸை ஆதாரமாக வைத்து பெண்கள்,பெண்களுக்கு இமாமத் செய்யலாம் என்று முடிவெடுத்தால் பள்ளியிலும் பெண்கள்,ஆண்களுக்கும் இமாமத் செய்ய முடியும் என்ற சட்டம் வந்து விடும் அதனால் அந்த ஹதீஸை வைத்து நாம் பெண்கள்,பெண்களுக்கு இமாமத் செய்ய முடியும் என்று முடிவெடுக்கக் கூடாது என்று வாதிடுகிறார்கள்.

அவா்கள் எடுத்து வைக்கும் இந்த வாதம் தவறானதாகும்.

அதாவது பெண்களுக்கு,பெண்கள் இமாமத் செய்யலாம் என்று மேற்கண்ட ஹதீஸை வைத்துச் சட்டம் சொன்னால் ஆண்களுக்கும்,பெண்கள் இமாமத் செய்யலாம் என்று விளங்க எந்த நியாயமும் இல்லை.
ஏன் எனில் ஆண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யக் கூடாது என்பது தெளிவானதாகும்.

தொழுகையில் ஆண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது முதல் ஸஃப்பாகும். அந்த ஸஃப்புகளில் கெட்டது கடைசி ஸஃப்பாகும். பெண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது அவற்றில் கடைசி ஸஃப்பாகும். அவைகளில் கெட்டது ஆரம்ப ஸஃப்பாகும் என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)

ஆக பெண்கள்,பெண்களுக்கு இமாமத் செய்வதைத் தடுப்பதற்கு மார்க்கத்தில் எந்த ஒரு தடையும் இல்லாததினாலும்,இமாமத்தை பற்றிய பொதுவான செய்திகள் ஆண்,பெண் என்ற இரு சாராருக்கும் உரியதாக இருப்பதினாலும் பெண்கள்,பெண்களுக்கு இமாமத் செய்ய முடியும் என்பதே சரியானதாகும்.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts