பதில்:
இஸ்லாத்துக்கும், தாலிக்கும் சம்பந்தமில்லை. ‘பாத்திமா நாயகி தாலி
கட்டினார்கள்” என்று ஒரு பொய்யைச் சொல்லிக் கொண்டு நம்மவர்கள் அதை மார்க்கமாக எண்ணிக் கொண்டுள்ளனர். தாலி என்று சொல்லாமல் “கருகமணி” என்று பெயரை மட்டும் மாற்றிக் கொண்டு ஏராளமான மெளட்டீகங்களும் நடைமுறையில் இருந்து வருகின்றன. கருகமணி அறுந்து விட்டால், அறுந்து விட்டது என்று கூட சொல்லக் கூடாதாம். பெருகி விட்டது என்று சொல்ல ேவண்டுமாம். இப்படி பெருகி விட்ட(?) பின் புதிய நூலில் கோர்த்து கட்டுவதற்கு ஒரு பாத்திஹாவும் ஓத வேண்டுமாம்! இவைகளெல்லாம் அல்லாஹ்வோ, அவனது தூதரோ நமக்குச் சொல்லித் தராதவைகளாகும். ஒரு பெண்ணிற்குத் திருமணம் ஆகி விட்டதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்து விட்டது? அப்படியே அவசியமேற்பட்டால் ஊரில் விசாரித்தால் சொல்லப் போகிறார்கள்.
No comments:
Post a Comment