Tuesday, 9 April 2013

மனைவிக்காக தாடியை விடலாமா ?


சில சகோதரர்கள் தாடி வைப்பதில்லைஏன் தாடி வைக்கவில்லை என்று கேட்டால், "என் மனைவி இப்போது வைக்க வேண்டாம்வயதானதும் வைத்துக் கொள்ளுங்கள்என்று கூறுகிறாள். அதனால் வைக்கவில்லைஎன்று பதில் கூறுகின்றனர். சுன்னத்தைப் புறக்கணிக்கும் இவர்களின் நிலை மறுமையில் எப்படியிருக்கும்?"




இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்;தாடிகளை வளர விடுங்கள்மீசையை ஒட்ட நறுக்குங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 5892

தாடி வைப்பதை வலியுறுத்தி இது போன்ற பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. எனவே தாடி என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட சுன்னத் ஆகும். இதை எக்காரணம் கொண்டும் ஒரு முஸ்லிம் புறக்கணிக்கக் கூடாது.

தாடியை மழித்தல் என்பது சுன்னத்தைப் புறக்கணிப்பது என்று சொல்வதை விடதானாக வளரும் ஒரு சுன்னத்தை அழித்தல் என்று தான் கூற வேண்டும்.

பாவமான காரியத்தில் மனைவிக்குக் கணவனோ,அல்லது கணவனுக்கு மனைவியோ கட்டுப்படக் கூடாது.

அன்சாரிகளில் ஒரு பெண் தனது மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரது மகளின் தலைமுடி உதிர்ந்து விட்டது. அவள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்துத் தெரிவித்து விட்டு, "என் கணவர் எனது தலையில் ஒட்டு முடி வைத்துக் கொள்ளுமாறு பணிக்கிறார்'' என்று கூறினாôள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வேண்டாம்! ஒட்டு முடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 5205, 5934
எனவே மனைவியோஅல்லது மற்றவர்களோ கூறுகின்றார்கள் என்பதற்காக தாடியைச் சிரைக்கக் கூடாது.

இவ்வாறு செய்பவர்களின் நிலை மறுமையில் எப்படியிருக்கும்என்று கேட்டுள்ளீர்கள்.
ஒவ்வொரு பாவத்தையும் குறிப்பிட்டுஅவரது நிலை மறுமையில் எப்படியிருக்கும் என்று மார்க்கத்தில் கூறப்படவில்லை. எனவே தவறு என்று கண்டால் அதைச் சுட்டிக் காட்டுவது தான் நமது கடமை. மறுமை நிலை குறித்து அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்.
அந்நாளில் மதிப்பீடு செய்தல் உண்மை. (நன்மையின்) எடைகள் கனமாக இருப்போரே வெற்றி பெற்றோர். (நன்மையின்) எடைகள் இலேசாக இருப்போர் தமக்கே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். நமது வசனங்கள் விஷயத்தில் அநீதியாக அவர்கள் நடந்து கொண்டதே இதற்குக் காரணம்.
(அல்குர்ஆன் 7:8,9)

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts