பெண்கள் தலைமுடியை வெட்டலாமா? அந்தரங்கமான இடங்களில் உள்ள முடிகளை நீக்கலாமா?
பதில்
பெண்கள் தலைமுடியை வெட்டலாமா என்பது பற்றி முன்னர் எழுதப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க:
http://onlinepj.com/kelvi_pathil/penkal_kelvi/pengal_mottai_mudiyai_kuraithal/
http://onlinepj.com/kelvi_pathil/penkal_kelvi/pengal_mottai_mudiyai_kuraithal/
ஆண்களைப் போலவே பெண்களும் தமது அந்தரங்கமான பகுதிகளில் உள்ள முடிகளை நீக்க வேண்டும். குறிப்பாக வெளியூர் சென்ற கணவன் ஊர் திரும்பும் போது இவ்வாறு செய்வது சிறந்த நடைமுறையாகும். இதைப் பின்வரும் நபிமொழியில் இருந்து அறியலாம்
5246ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(தபூக் போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த என்னிடம்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீ இரவில் (மதீனாவுக்குள்) நுழைந்த கையோடு உன் வீட்டாரிடம் சென்றுவிடாதே! (வெளியூர் சென்ற கணவரைப்) பிரிந்திருக்கும் பெண் சவரம் செய்வதற்கான கத்தியைப் பயன்படுத்தி(த் தன்னை ஆயத்தப்படுத்தி)க்கொண்டு தலைவாரிக்கொள்ளும் வரை (பொறுமையாயிரு!) என்று கூறிவிட்டு, புத்திசாலித்தனமாக நடந்து கொள்; புத்திசாலித்தனமாக நடந்துகொள் என்று சொன்னார்கள்.
நூல் புகாரி 5246
No comments:
Post a Comment