Tuesday 12 March 2013

இன்றைய இளம்பெண்கள்!



ஏற்கனவே ஈமான் என்றால்? .

என்ன இஸ்லாம் என்றால் என்ன


முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும் என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல், ஹிஜாப் முறையை சரிவர பேணாமல், அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க, தொழில் வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம், ஆபிஸ், காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், ஆபிஸ் டூர் , ஷாப்பிங் என்று போகும் இடங்களில், மஹரம் இல்லாத ஆண்களுடனும் மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.

இதன் காரணமாக சில மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் பெண்களுக்கு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்றுமத இளைஞர்கள் காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இது இருக்கிறது. விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், மொபைல் போன் இண்டெர்னெட் வடிவில் வந்துவிட்டது. முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலம் நேரடியாக அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள்.

இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.

மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்;

தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்;
மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம்.
அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள். (அல்குர்ஆன் 24:31)

1 comment:

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts