Saturday 23 March 2013

அகீகா கொடுப்பது அவசியமா? அதன் முறை என்ன?


அகீகாபற்றிய நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பொன்மொழிகளை அவர்கள் காலத்து நடைமுறையைப் பார்ப்போம்.
ஆண் குழந்தைக்காக அகீகாஉண்டு. அவன் சார்பாக இரத்தத்தை ஒட்டுங்கள்” (நபிமொழி)
அறிவிப்பவர் : சல்மான் இப்னு ஆமிர் (ரழியல்லாஹு அன்ஹு)
நூல்கள் : புகாரி, அஹ்மத், அபுதாவூது, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா.
ஒவ்வொரு ஆண் குழந்தையும் அகீகாவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளான். அவன் சார்பாக ஏழாம் நாள் அறுத்துப் பலியிடவும்! அன்றே பெயர் வைக்கவும்! அவன் தலை(மயிரை) களையவும்! (நபிமொழி)  அறிவிப்பவர்: சமுரா ரழியல்லாஹு அன்ஹு
நூல்கள்: அஹ்மத், நஸயீ, அபூதாவூது, திர்மிதீ, இப்னுமாஜா ஹாகீம், பைஹகீ.
ஆண் குழந்தை சார்பாக இரண்டு ஆடுகள்என்றும், ‘பெண் குழந்தை சார்பாக ஒரு ஆடுஎன்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஐபு ரழியல்லாஹு அன்ஹு நூல்கள்: அஹ்மத், அபூதாவூது, நஸயீ
இந்த நபிமொழியில் விரும்பினால்கொடுக்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் அகீகாகட்டாயமான ஒன்றல்ல என்றும் உணரலாம்.
அகீகாஅரபு நாட்டில் வழக்கமாகவே நடந்து வந்த நடைமுறையாகும். இஸ்லாம் வந்தபின், அதை அங்கீகாரம் செய்தது. ஆனால், ‘அகீகாவின் பெயரால் நடந்த வேறு சில சடங்குகளை இஸ்லாம் ஒழித்தது.
நாங்கள் அறியாமைக் காலத்தில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் ஒரு ஆட்டை அறுத்து, குழந்தையின் தலைமயிரை நீக்கி, அந்த ஆட்டின் இரத்தத்தை குழந்தையின் தலையில் பூசிக் கொண்டிருந்தோம். அல்லாஹ் இஸ்லாத்தைத் தந்தபோது ஒரு ஆட்டை அறுப்போம், குழந்தையின் தலைமயிரை நீக்குவோம். தலையில் குங்குமப் பூவைப் பூசுவோம் என்று புரைதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்கள் : அஹ்மத், அபூதாவூது, நஸயீ.
இதற்கு முன்னர் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களில் ஆண் குழந்தை சார்பாக இரண்டு ஆடுகள் என்று குறிப்பிடப்பட்டதைப் பார்த்தோம். இந்த ஹதீஸில் ஒரு ஆட்டை ெகாடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஹதீஸிலிருந்து ஆண் குழந்தையின் சார்பாக ஒரு ஆடும் கொடுக்கலாம் என்று உணர முடிகின்றது. இரண்டு ஆடுகள் கொடுப்பது சிறப்புடையது என்பதை முன் சொன்ன ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. ஒரு ஆடும் கொடுக்கலாம் என்பதற்குப் பின் வரும் நபி வழியும் சரியான ஆதாரமாகின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு சார்பாக ஒவ்வொரு ஆடு அகீகாகொடுத்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு  நூல்கள்: அபூதாவூது, இப்னு ஹப்பான், ஹாகிம், பைஹகீ
இந்த நபிவழி ஒரு ஆடு கொடுக்கலாம் என்ற அனுமதியை உணர்த்துவதோடு, பெற்றவர்கள் தான் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை, மிக நெருங்கிய உறவினர்களும் கொடுக்கலாம் குறிப்பாக குழந்தையின் பாட்டனார் கொடுக்கலாம் என்பதையும் உணாத்துகின்றது. குழந்தையின் பெற்றோர் உயிருடன் இருக்கும் போதே பாட்டனார் கொடுக்கலாம் என்பதையும் இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்துகின்றது. ஹஸன்(ரழி) ஹுஸைன்(ரழி) இருவரின் பெற்றோர்கள் இருந்தபோதே அவர்களின் பாட்டனாராகிய நபி(ஸல்) அவர்கள் அகீகா கொடுத்துள்ளனர்.
குழந்தை பிறந்த ஏழாம் நாள் அகீகா கொடுக்கப்பட வேண்டும்என்பதை, இரண்டாவதாக நாம் குறிப்பிட்ட ஹதீஸ் குறிப்பிடுகின்றது. எனினும், பதினான்காம் நாள், இருபத்தி ஒன்றாம் நாளிலும் கொடுக்கலாம் என்று நபி(ஸல்) கூறியதாக பைகஹீயில் ஹதீஸ் உள்ளது. ஏழாம் நாளிலோ கொடுக்கலாம். அது தவறி விட்டால் வேறு நாட்களில் கொடுக்க வேண்டும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
நபியாக ஆக்கப்பட்ட பின் நபி(ஸல்) அவர்கள் தனக்காக அகீகாகொடுத்தார்கள் என்று பைஹகீயில் இடம் பெற்றுள்ள ஹதீஸ், நிராகரிக்கப்பட்டதாகும். இதன் அறிவிப்பாளர்களில் அப்துல்லாஹ் இப்னு முஹர்ரர் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் நிராகரிக்கப்படக் கூடியவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்) கூறுகிறார்கள். இமாம் நவபீ அவர்கள் இது பொய்யான ஹதீஸாகும்என்று ஷரஹுல் முஹத்தப்நூலில் குறிப்பிடுகிறார்கள்.
ஆக மேற்கூறிய ஹதீஸ்களிலிருந்து ஆண் குழந்தை சார்பாக இரண்டு ஆடுகள் கொடுப்பது சிறப்பு என்றும் ஒரு ஆடு கொடுப்பது போதுமானது என்றும் அது கட்டாயக் கடமையானதல்லவென்றும் 7,14,21 ஆகிய நாட்களில் கொடுக்க வேண்டும் என்றும் தெரிந்து கொள்ள முடிகின்றது.
அதன் மாமிசத்தை எப்படிபட பங்கிடப்பட வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடாததாலும், ஸஹாபாக்கள் இதுபற்றி கேட்காததாலும், குர்பானி மாமிசம் பங்கிடப்படுவது போன்றே இதுவும் பங்கிடப்பட்டிருக்க வேண்டும் என்று அனுமானம் செய்யலாம்.


No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts