இன்றைய
காலகட்டத்தில் நாம் இஸ்லாமியப் பிரச்சாரத்தை செய்கின்ற நேரங்களில் அதிகமான
மக்களால் பரவலாக கேற்கப்படும் ஒரு கேள்விதான் பெண்களுக்கு பிரச்சாரம் செய்கின்ற
நேரத்தில் ஏன் நீங்கள் திரை போடுவதில்லை? இந்தக் கேள்வியைக் பொருத்த
மாத்திரத்தில் திரையைப் பற்றிய சரியான இஸ்லாமியக் கண்ணோட்டத்தை நாம் தெளிவாக
புரிந்து கொள்ள வேண்டும். திரை என்றால் என்ன?
ஆண்
பிரச்சாரகா்கள் பெண்கள் பயான் நிகழ்ச்சிகள் அல்லது பெண்களுக்கான குா்ஆன்
வகுப்புகள் நடத்தும் போது பிரச்சாரகா்களுக்கும் கேட்கும் பெண்களுக்கும் இடையில்
ஒரு மறைப்பை ஏற்படுத்துவார்கள் இது திரை என்ற வாசகத்தினால் குறிப்பிடப் படுகிறது.
இப்படி
திரை போட்டு இரண்டு தரப்பாரையும் பிரித்து வைப்பது மார்க்கத்தில் உள்ளது தான் என
மக்கள் எண்ணுகிறார்கள்.
பிரச்சாரத்திற்கு
மட்டும் தான் திரையா?
பெண்கள்
பயான் நிகழ்சிகள் அல்லது குா்ஆன் விளக்க வகுப்புகள் நடத்துகின்ற நேரத்தில்
பெரும்பாலான பள்ளிகளில் இந்தத் திரை போடும் முறையை கையால்கிறார்கள்.இப்படி திரை
போடும் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டால் பெண்களை ஆண்கள் பார்த்துவிடக் கூடாது அதனால்
தான் இப்படி நாங்கள் செய்கிறோம்.
அப்படி
பார்க்கிற நேரங்களில் மார்க்கத்திற்கு முரனான காரியங்கள் நடப்பதற்கு வாய்பாக
இருக்கிறது.என்று கூறிவிடுகிறார்கள்.
இப்படி
மார்க்கப் பிரச்சாரத்திற்கு காரணம் சொல்லக் கூடியவர்கள் இதே காரணத்தை மற்ற
இடங்களில் நடை முறைப்படுத்துவதில்லை.
கடைத்தெருவில்
பெண்களுக்கு இந்தச் சட்டத்தை சொல்வதில்லை.
கல்லூரிகளில்
படிக்கும் சகோதரிகளுக்கு இந்தச் சட்டத்தை சொல்வதில்லை.
பஸ்ஸில்
பிரயாணிக்கும் பெண்களுக்கு இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த சொல்வதில்லை.
பகுதி
நேர வகுப்புகளுக்கு செல்லும் பிள்ளைகள் விஷயத்தில் இந்த நடை முறையைக்
கையால்வதில்லை.
பல்பொருள்
அங்காடி (சூப்பர் மார்க்கட்) களில் பொருள் வாங்கச் செல்லும் பெண்கள் விஷயத்தில்
இந்தச் சட்டத்தை இவா்கள் பங்கு வைப்பதில்லை.
இப்படி
எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் எதற்கும் சொல்லாத இந்த சட்டத்தை மார்க்க விஷயத்தில்
மாத்திரம் ஏன் கடைப்பிடிக்கிறார்கள்.
கடைத்தெருவில்
திரை இல்லை. தவறு நடக்காதா?
கல்லூரிகளில்
திரை இல்லை தவறு நடக்காதா?
பஸ்களில்
திரை இல்லை தப்பு ஏற்படாதா?
பகுதி
நேர வகுப்புகளில் குற்றம் நடக்காதா?
குற்றத்தைப்
பொருத்தவரையில் இறையச்சம் இல்லாவிடில் எந்த இடத்திலும் தவறுகள் நடக்கலாம்.
அதற்காக
மார்க்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை பேணுதல் என்ற அடிப்படையில் நாம் நடைமுறைப்
படுத்தக் கூடாது.
நபியவா்கள்
திரையைப் பயன் படுத்தினார்களா?
நபியவா்களின்
காலத்தில் நபி(ஸல்)அவா்கள் பெண்களுக்கு மத்தியில் மார்கப் பிரச்சாரத்தை செய்திருக்கிறார்கள்.அப்படி
பிரச்சாரம் செய்கின்ற நேரங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் பிரித்து
திரை ஏதும் பயண்படுத்தவில்லை.
தற்காலத்தில்
யார் அப்படி திரை போட்டு பிரச்சாரம் செய்ய வேண்டும் என கட்டாயப் படுத்துகிறார்களோ
அவர்கள் இதற்குறிய ஆதாரத்தை முன்வைக்க வேண்டும்
.
அபூசயீத்
அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்‘ஹஜ்ஜுப் பெருநாள்‘ அல்லது ‘நோன்புப் பெருநாள்‘ தினத்தன்று முஸல்லா எனும் தொழுகைத்திடலுக்குப் புறப்பட்டு
வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று ”பெண்கள் சமூகமே! தான தர்மங்கள்
செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகüல் நீங்களே அதிகமாக இருப்பதை எனக்குக்
காட்டப்பட்டது” என்று குறிப்பிட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு
இந்த நிலை)?” எனப் பெண்கள் கேட்டதும். ”நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள் மனக் கட்டுப்பாடுமிக்க கூரிய அறிவுடைய ஆண்களின் புத்தியை அறிவிலும்
மார்க்க(த் தின் கடமையி)லும் குறையுடையவர்களான நீங்கள் போக்கி விடுவதையே நான்
காண்கின்றேன்” என்று கூறினார்கள். அப்போதும் அப்பெண்கள் ”மார்க்த்திலும் அறிவிலும் எங்களுடைய
குறைபாடு என்ன அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். ”பெண்களின் சாட்சியம் ஆண்களின்
சாட்சியத்தில் பாதியளவு அல்லவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க அப்பெண்கள் ”ஆம் (பாதியளவுதான்)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”அதுதான் அவளது அறிவின் குறைபாடாகும்:”என்று கூறிவிட்டு ஒரு பெண்ணுக்கு
மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை நோன்பு நோற்பதில்லை அல்லவா?” என்று கேட்க மீண்டும் அப்பெண்கள்”ஆம் (தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை)” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதுதான்
அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறைபாடாகும்” என்று கூறினார்கள்.(புகாரி 304)
மேற்கண்ட
செய்தியில் நபியவர்கள் பெருநாள் தினத்தில் பெண்கள் பகுதிக்கு சென்று அங்குள்ள
பெண்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.ஆனால் அங்கு திரை போட்டு பேசவில்லை.
பொதுவாகவே
பெண்களுக்கு மார்க்கப் பிரச்சாரம் செய்யும் போது இந்த நடை முறையைத் தான் நாம்
கையால வேண்டும் பேணுதல் என்று கூறிக் கொண்டு நபியவர்கள் காட்டித் தராத காரியங்களை
நாமாக மார்க்கம் என்று புகுத்துதல் கூடாது.
இதே
நேரம் பள்ளியில் நுழையும் போது மற்றவர்களால் பெண்களுக்கு ஏதும் பிரச்சினை ஏற்படும்
என்று நாம் கருதும் பட்சத்தில் ஓரங்களில் திரைகளை போட்டுக் கொள்வதில் எந்தத்
தவரும் இல்லை.
ஆனால்
உரை நிகழ்த்தும் இமாமுக்கும் அதனை கேற்பவர்களுக்கும் மத்தியில் திரை போட வேண்டும்
என்று மார்க்கத்தில் இல்லாத ஒரு சட்டத்தை தினிப்பது குற்றமாகும்.
No comments:
Post a Comment