Wednesday, 1 May 2013

குற்றாலத்தில் குளிக்கலாமா?

குற்றாலம் மற்றும் குளம் போன்ற நீர்நிலைகளில் குளிக்கலாமா?






    அன்னிய ஆண்கள் தன் உடம்பை பார்ப்பதற்கு வாய்ப்புள்ள இடங்களில் பெண்கள் குளிப்பது கூடாது. 

ஹிம்ஸ் அல்லது ஷாம் நாட்டைச் சார்ந்த பெண்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் வருகை தந்திருந்தார்கள். குளியலறைகளுக்குச் சென்று (குளித்து வரும்) பெண்கள் நீங்கள் தான? தனது கணவனுடைய வீடு அல்லாத வேறு இடத்தில் ஆடையை அவிழ்க்கும் பெண் தனக்கும் தன் இறைவனுக்கும் மத்தியிலிருந்த திரையை கிழித்துவிடுகிறாள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : அபுல் மலீஹ் (ரஹ்)
நூல் : திர்மிதி (2727)


    எனவே ஆணும் பெண்ணும் கலந்திருக்கும் இடத்தில் ஆடையை கிழற்றுவது கூடாது. 
    புர்காவுடன் குற்றாலத்தில் குளிக்கலாம் என்று சிலர் கருதிக்கொண்டிருக்கிறார்கள். 

இது தவறாகும். இஸ்லாமிய ஒழுங்குமுறையை மீறுகின்ற ஒழுக்கம் கெட்ட இடங்களில் குற்றாலம் ஒன்றாகும். அங்கு வரும் ஆண்களில் பெரும்பாலானவர்களின் பார்வை குளித்துக்கொண்டிருக்கும் பெண்களை நோக்கியே உள்ளது. அறைகுறை ஆடையுடன் குளித்துக்கொண்டிருக்கும் பெண்களுடன் நாம் புர்காவை அணிந்து குளித்தாலும் நம்மையும் அண்ணிய ஆடவன் தவறான பார்வையில் பார்க்கத்தான் செய்வான். 

    இறைவனின் வசனங்கள் கேலிகூத்தாக்கப்படும் இடங்களுக்கு நாம் செல்லக்கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. எனவே ஆணும் பெண்ணும் கலந்து குளிக்கும் ஒழுக்கம் கெட்ட இடங்களை பெண்கள் மாத்திரம் இல்லாமல் ஆண்களும் புறக்கணித்தாக வேண்டும். 
    அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான்.
அல்குர்ஆன் (4 : 140)




    ஆண்கள் வராத நீர்நிலையாக இருந்தால் அல்லது ஆண்களின் பார்வை படாதவாறு மறைப்புகள் உள்ள அருவியாக இருந்தால் மாத்திரமே அவ்விடத்தில் குளித்துக்கொள்வதில் தவறில்லை.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts