Tuesday 6 August 2013

புது வீடு கட்டி சாப்பாடு போடலாமா?




அஸ்ஸலாமு அலைக்கும் புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்து சாப்பாடு போடலாமா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தரவும். முஜிபுர் ரஹ்மான் பதில் :                


 இன்றைக்கு கிரகப்பிரவேசம் என்ற பெயரில் ஏராளமான தவறுகளை நம் சமுதாய மக்கள் செய்துவருகின்றனர். புதுவீட்டுக்கு வந்தவுடன் பால்காச்ச வேண்டும். வீட்டில் ஜமாஅத் தொழுகை நடத்தப்பட வேண்டும். ஃபாத்திஹா ஓதப்பட வேண்டும் என்று பலவிதமான மூடநம்பிக்கைகள் மக்களிடம் காணப்படுகின்றது. இவைகளுக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.                 

புதுவீடு கட்டி மக்களை அழைத்து விருந்துபோடுவதை மட்டுமே இஸ்லாம் அனுமதிக்கின்றது. இதைத் தவிர ஏனைய சடங்கு சம்பரதாயங்களை தடை செய்கின்றது. 7281حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَادَةَ أَخْبَرَنَا يَزِيدُ حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ وَأَثْنَى عَلَيْهِ حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ حَدَّثَنَا أَوْ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ جَاءَتْ مَلَائِكَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ نَائِمٌ فَقَالَ بَعْضُهُمْ إِنَّهُ نَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ إِنَّ الْعَيْنَ نَائِمَةٌ وَالْقَلْبَ يَقْظَانُ فَقَالُوا إِنَّ لِصَاحِبِكُمْ هَذَا مَثَلًا فَاضْرِبُوا لَهُ مَثَلًا فَقَالَ بَعْضُهُمْ إِنَّهُ نَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ إِنَّ الْعَيْنَ نَائِمَةٌ وَالْقَلْبَ يَقْظَانُ فَقَالُوا مَثَلُهُ كَمَثَلِ رَجُلٍ بَنَى دَارًا وَجَعَلَ فِيهَا مَأْدُبَةً وَبَعَثَ دَاعِيًا فَمَنْ أَجَابَ الدَّاعِيَ دَخَلَ الدَّارَ وَأَكَلَ مِنْ الْمَأْدُبَةِ وَمَنْ لَمْ يُجِبْ الدَّاعِيَ لَمْ يَدْخُلْ الدَّارَ وَلَمْ يَأْكُلْ مِنْ الْمَأْدُبَةِ فَقَالُوا أَوِّلُوهَا لَهُ يَفْقَهْهَا فَقَالَ بَعْضُهُمْ إِنَّهُ نَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ إِنَّ الْعَيْنَ نَائِمَةٌ وَالْقَلْبَ يَقْظَانُ فَقَالُوا فَالدَّارُ الْجَنَّةُ وَالدَّاعِي مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَنْ أَطَاعَ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ عَصَى مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَدْ عَصَى اللَّهَ وَمُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرْقٌ بَيْنَ النَّاسِ تَابَعَهُ قُتَيْبَةُ عَنْ لَيْثٍ عَنْ خَالِدٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ عَنْ جَابِرٍ خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه البخاري 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்கüடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் ''இவர் உறங்கிக்கொண்டிருக்கிறார்'' என்றார். அதற்கு மற்றொருவர் ''கண்தான் உறங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது'' என்று கூறினார். பின்னர் அவர்கள் ''உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்'' என்று பேசிக்கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் ''இவர் உறங்குகிறாரே!'' என்றார். மற்றொருவர் ''கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது'' என்றார். பின்னர் அவர்கள் ''இவரது நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; 

விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்துண்ணவுமில்லை'' என்று கூறினார்கள். பின்னர் அவர்கள், ''இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்துகொள்ளட்டும்'' என்றார்கள். அப்போது அவர்கüல் ஒருவர் ''இவர் உறங்குகிறாரே!'' என்று சொல்ல, மற்றொருவர் ''கண்தான் தூங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது'' என்றார். அதைத் தொடர்ந்து ''அந்த வீடுதான் சொர்க்கம்; அழைப்பாளர் முஹம்மத் (ஸல்) அவர்கள்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப் படிந்துவிட்டார்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்தவர் அல்லாஹ் வுக்கு மாறுசெய்துவிட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்களை (நல்லவர் கெட்டவர் என)ப் பகுத்துக் காட்டிவிட்டார்கள்'' என்று விளக்கமளித்தார்கள். புகாரி (7281) 

வானவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு இந்த உவமையை கூறியதி­ருந்து இந்த உவைமையில் சொல்லப்படும் செய்தி சரியானது என்பதை புரியலாம். புது வீடு கட்டி விருந்து அளிப்பதை வானவர்கள் உவமையாகக் கூறுகின்றனர். இவ்வாறு விருந்தளிப்பது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட காரியமாக இருந்தால் அதை நபியவர்களுக்கு உதாரணமாக கூறியிருக்கமாட்டார்கள். புதுவீடு கட்டியதற்காக விருந்தளிப்பது சிறந்த செயல் என்பதாலே இதை நபியவர்களுக்கு உதாரணமாக கூறியுள்ளனர். எனவே புது வீடு கட்டினால் விருந்து ஏற்பாடு செய்வதற்கு மட்டும் அனுமதியுள்ளது. 

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/bidath/PUTHU_VEEDU_SAPPADU_PODALAMA/
Copyright © www.onlinepj.com

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts