Thursday 25 July 2013

முகத்தை மூடிக் கொண்டு தூங்கலாமா?

முகத்தை மூடிக் கொண்டு தூங்கலாமா  

பதில் : 

முகத்தை மறைத்து உறங்குவதை மார்க்கம் தடை செய்யவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது முகத்தை போர்வையால் மறைத்து உறங்கியுள்ளார்கள். இதைப் பின்வரும் சம்பவம் தெளிவுபடுத்துகின்றது

. 988 حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ فِي أَيَّامِ مِنَى تُدَفِّفَانِ وَتَضْرِبَانِ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَغَشٍّ بِثَوْبِهِ فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ فَكَشَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ وَجْهِهِ فَقَالَ دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ وَتِلْكَ الْأَيَّامُ أَيَّامُ مِنًى وَقَالَتْ عَائِشَةُ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتُرُنِي وَأَنَا أَنْظُرُ إِلَى الْحَبَشَةِ وَهُمْ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ فَزَجَرَهُمْ عُمَرُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعْهُمْ أَمْنًا بَنِي أَرْفِدَةَ يَعْنِي مِنْ الْأَمْنِ رواه البخاري 

மினாவின் நாட்களில் என் அருகில் சிறுமியர் இருவர்  கஞ்சிராக்களை அடித்து (பாடிக்) கொண்டிருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆடையால் போர்த்தி(ப் படுத்துக்) கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து அவ்விருவரையும் அதட்டினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் முகத்தை விட்டு ஆடையை விலக்கி, "அவ்விருவரையும் விட்டு விடுங்கள், அபூபக்ரே! (அவர்கள் பாடட்டும்.) ஏனெனில், இவை பண்டிகை நாட்களாகும்'' என்று கூறினார்கள். அந்த நாட்கள் (துல்ஹஜ் 10, 11, 12, 13 ஆகிய) மினாவின் நாட்களாக அமைந்திருந்தன. 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (987)

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts